ஒரு கேப்டனாக இதை பண்ணா தானா மரியாதை கிடைக்கும்.. அதை சுப்மன் கில் சரியா பண்றாரு – மைக்கல் கிளார்க் பாராட்டு

Clarke and Gill
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகின்றார். விராட் கோலியின் நான்காவது இடத்தை கேட்டு பெற்ற அவர் அந்த இடத்தில் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்து இருந்தது.

கேப்டனாக மரியாதை கிடைக்க இதைத்தான் பண்ணனும் : மைக்கல் கிளார்க்

ஏற்கனவே ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும், மூன்றாவது இடத்திலும் விளையாடிய அவர் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது விமர்சனமும் இருந்தது. ஆனால் நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக அறிமுகமாகிய அவர் முதல் இரண்டு போட்டியிலே கிட்டத்தட்ட 600 ரன்கள் அடித்து அசத்தலான பார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கில் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 269 ரன்களை குவித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 161 ரன்கள் அடித்து 430 ரன்கள் குவித்தார். அவர் அடித்த இந்த ரன்களின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்திய அவர் எட்ஜ்பேஸ்டன் வெற்றிக்கும் வழி வகுத்திருந்தார்.

இந்நிலையில் கேப்டனாக தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான மைக்கேல் கிளார்க் பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு கேப்டனாக உங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டுமெனில் பேட்டிங்கில் நீங்கள் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் சரியான பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது பேட்டிங்கின் மூலம் நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது. ஒரு கேப்டனாக அனைவரும் உங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமெனில் : நீங்கள் அவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : 3வது டெஸ்டில் அவரை களமிறக்குவோம்.. லார்ட்ஸ் வேற மாதிரி இருக்கும்.. இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த மெக்கல்லம்

அந்த வகையில் இந்த இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவருடைய ஆட்ட நுனுக்கங்கள் மிகச் சிறப்பாக இருப்பதனால் இனிவரும் காலத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்குவார் என்ற நம்பிக்கையும் தன்னிடம் உள்ளதாக மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement