3வது டெஸ்டில் அவரை களமிறக்குவோம்.. லார்ட்ஸ் வேற மாதிரி இருக்கும்.. இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த மெக்கல்லம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் அதற்கும் சேர்த்து இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. அதனால் படுதோல்வியைச் சந்திக்கும் என்று கணித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. அடுத்ததாக 3வது போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

வேற மாதிரியான லார்ட்ஸ்:

முன்னதாக 2வது போட்டியில் பர்மிங்காம் பிட்ச் தாங்கள் நினைத்தது போல அல்லாமல் இந்தியாவுக்கு பொருத்தமாக இருந்ததே தோல்விக்கு காரணமானதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் தெரிவித்தனர். இந்நிலையில் 3வது போட்டியில் எக்ஸ்ட்ரா வேகம், பவுன்ஸ், இரு பக்கமும் பந்து திரும்புவதற்கு சாதகமாக பிட்ச்சை தயாரிக்குமாறு லார்ட்ஸ் தயாரிப்பாளரை ப்ரெண்டன் மெக்கல்லம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே போல அதிரடியான வேகத்தில் வீசக்கூடிய ஜோப்ரா ஆர்ச்சரை 3வது போட்டியில் களமிறக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் ஆர்ச்சர் விளையாடுவதால் 3வது போட்டி இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று மறைமுகமாக எச்சரிக்கும் மெக்கல்லம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் அதிகமான பவுன்ஸ், வேகம், கொஞ்சம் இருபுறமும் பந்து திரும்புவதற்கு தேவையான மூமன்ட் ஆகியவை இருக்கக்கூடிய பிட்ச் அமையும் என்று நம்புகிறோம்”

- Advertisement -

மிரட்ட வரும் ஆர்ச்சர்:

“ஆர்ச்சர் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். அது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடாத அவரால் என்ன சாதிக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். தற்போது வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்த வாய்ப்பை மீண்டும் பிடித்து அவர் தன்னுடைய முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: எனக்கு அதுவே போதும்.. தகுதியான லாராவின் 400 ரன்ஸ் உலக சாதனையை உடைக்காதது ஏன்? முல்தர் பேட்டி

அதே போல ஜோப்ரா ஆர்ச்சர் 3வது போட்டியில் விளையாடுவது உறுதி என்று கேப்டன் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது போக கஸ் அட்கின்சன் இங்கிலாந்து அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார். அதனால் 3வது போட்டியில் இங்கிலாந்து தங்களுடைய பவுலிங் துறையை வலுப்படுத்தி லார்ட்ஸ் பிட்ச்சில் இந்தியாவுக்கு பதிலடிக் கொடுக்க தயாராகி வருகிறது.

Advertisement