- Advertisement -
ஐ.பி.எல்

இதுமட்டும் நடந்தா போதும்.. ரோஹித் சர்மா செஞ்சுரி அடிக்கப்போவது உறுதி – மைக்கல் கிளார்க் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு ரோஹித் சர்மாவை வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை நியமித்தது. அப்படி பாண்டியாவின் தலைமையில் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது. இதன்காரணமாக இந்த ஆண்டு நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் வலுவான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெகுவிரைவில் ரோஹித் சர்மா சதம் அடிப்பார் : மைக்கல் கிளார்க்

ஆனால் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரும் மும்பை அணிக்கு இதுவரை மோசமாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 5 போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தினை பிடித்துள்ளது.

- Advertisement -

பலமான அணியாக இருந்தும் அந்த அணி பெற்று வரும் தொடர் தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் தனிப்பட்ட மோசமான பேட்டிங் பார்ம் அந்த அணிக்கு கவலை அளிக்கும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் மிகச் சிறப்பான அதிரடி துவக்க ஆட்டக்காரராக இருந்தும் அவரால் பெரியளவில் ரன் குவிக்க முடியாமல் போவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற பேச்சுகள் எல்லாம் எழ ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் தற்போது மோசமான பேட்டிங் பார்மில் தடுமாறி வரும் ரோகித் சர்மா நிச்சயம் வெகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் சதம் அடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் ஆனாலும் அவர் சதம் அடிப்பதற்கு இன்னும் சில போட்டிகள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். ஒரு ஆட்டத்தில் அவர் 40 முதல் 60 ரன்கள் வரை கொண்ட இன்னிங்சை விளையாடிவிட்டால் அதன்பிறகு அதில் கிடைக்கும் முமென்ட்டத்தை வைத்து நிச்சயம் வெகு விரைவில் சதம் அடிப்பார்.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணி பெற்ற வெற்றியால் சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – புள்ளி பட்டியலில் ஏற்பட்ட பின்னடைவு

அவரைப் போன்ற ஒரு பெரிய பிளேயருக்கு மொமென்டம் கிடைத்துவிட்டால் எப்படிப்பட்ட இன்னிங்ஸ்ஸை விளையாடுவார் என்பது உங்களுக்கே தெரியும். தற்போதைய அவருடைய பார்ம் பற்றி நான் பெரியளவில் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் ரோகித் சர்மா போன்ற ஒரு சிறப்பான பேட்ஸ்மேனுக்கு மீண்டும் பார்முக்கு திரும்ப ஒரு நல்ல இன்னிங்ஸ் போதுமானது என மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -