ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தும் – மைக்கல் கிளார்க் கருத்து

Clarke
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள வேளையில் குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் : மைக்கல் கிளார்க்

அதனை தொடர்ந்து அடுத்ததாக இரண்டு அரையிறுதி போட்டியிலும் அதன் பின்னர் மாபெரும் இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த கருத்தினை பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஒர ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

என்னை பொறுத்தவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தான் இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்றாலும் இதுவரை விளையாடிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தும். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தற்போது உலகின் சிறந்த அணியாக இருக்கும் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என மைக்கேல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நெட் பவுலருக்கு அன்புப்பரிசு வழங்கி பெரிய மனதை காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியானது நாளை மார்ச் 2-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது ஐ.சி.சி கிரிக்கெட் அகாடெமியில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement