- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார்? – மைக்கல் கிளார்க் கணிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் பெர்த் நகருக்கு சென்று தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார்? : மைக்கல் கிளார்க் கணிப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் வெல்லப்போவது யார்? அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போவது யார்? அதிக ரன்கள் எடுக்கப்போவது யார்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் வெற்றி பெறப்போவது யார்? அதிக ரன்கள் குவிக்கப்போவது யார்? என சில முக்கிய கணிப்புகளை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இந்த தொடரில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரராக விராட் கோலி தான் இருப்பார். இல்லையென்றால் ரோகித் சர்மா இருப்பார். ஏனென்றால் இதுவே அவர்களுக்கு கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம். எனவே இந்த தொடரில் சாதித்து விட்டு வெளியேற அவர்கள் விரும்புவார்கள்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் துவக்க வீரராக களமிறங்குவதை விட நடுவரிசையில் களமிறங்குவது தான் மிகவும் எளிது. அதனால் ரோஹித்தை விட கோலி அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1)என்ற கணக்கில் கைப்பற்றும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ஒருநாள் ரன்கள் அடித்த.. டாப் 4 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்

இந்த தொடர் அணிகளுக்குமே சவாலான தொடராக அமையும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர் என்பதனால் நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக தான் இருப்பேன் என்று மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

- Advertisement -