ஆஸி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தால் அதற்கு இவரே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும் – கிளார்க் ஓபன்டாக்

Clarke
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. நவம்பர் 27ஆம் தேதி ஒருநாள் தொடங்கப் போகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சிட்னி மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இது முடிந்தவுடன் டி20 தொடர் துவங்கும். அது முடிந்தவுடன் டிசம்பர் 17ஆம் தேதியிலிருந்து டெஸ்ட் தொடங்கப் போகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடிய பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீதமுள்ள 3 போட்டிகளில் விளையாடாமல் இந்தியாவிற்கு திரும்பி விடுவார்.

INDvsAUS

- Advertisement -

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. ஏனெனில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது. அந்த நேரத்தில் தனது மனைவியுடன் இருப்பதற்காக இந்தியாவுக்கு செல்கிறார் விராட் கோலி. இது தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஒரு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசி வருகின்றனர்

இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில்….

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது போலவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும். விராட் கோலி இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். அவர் அணியை வழிநடத்தும் விதம் தான் அணிக்கு வெற்றியை தேடித் தந்து கொண்டிருக்கிறது இதுதான்.

Kohli

அந்த அணியின் வெற்றிக்கான சூத்திரமாக இருக்கிறது. இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டால், டெஸ்ட் போட்டியில் ஒயிட்வாஷ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி விராட்கோலி செல்லும் போது இந்திய அணி தோற்று விட்டால் அதற்கு அவர்தான் காரணமாக இருப்பார். அதற்குள் சரியான இந்திய அணியை கட்டமைத்து விட்டுச்செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மைக்கேல் கிளார்க்.

Advertisement