உண்மையில் இந்தியாவில் இதை செய்ததில் மகிழ்ச்சி.. ஒருநாள் தொடர் வெற்றி குறித்து – நியூசி கேப்டன் பேட்டி

Michael Bracewell
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியானது நேற்று இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சி : மைக்கல் பிரேஸ்வெல்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 137 ரன்களையும், கிளன் பிலிப்ஸ் 106 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

- Advertisement -

பின்னர் 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 124 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 53 ரன்களையும் குவித்து இருந்தனர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கல் பிரேஸ்வெல் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்தியாவிற்கு வந்து இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் பலமான அணியை வீழ்த்தியது என்பது மிகப் பெருமையாக உள்ளது. எத்தனையோ தொடர்களில் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடியிருந்தாலும் இம்முறை இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதில் உண்மையிலேயே மகிழ்ச்சி.

இதையும் படிங்க : தோல்விக்கு ரோஹித்தை குறை சொல்லாதீங்க.. எல்லாருக்கும் ஆசை இருந்தாலும் சாத்தியமில்லை.. கில் பேட்டி

நிச்சயம் நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சித்தோம். அந்த வகையில் அதற்கான பலனும் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் தற்போது இந்தியாவிலும் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றியதை உண்மையிலேயே மிகப்பெரிய விடயமாக பார்ப்பதாக மைக்கல் பிரேஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement