இன்றைய போட்டியில் கோலியை விரைவில் அவுட் ஆக்கணுனா இதை செய்தே ஆகவேண்டும் – ரோஹித் சாதிப்பாரா ?

kohli

14 ஆவது ஐபிஎல் தொடர் இன்று மாலை 7.30 மணி அளவில் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்க உள்ளது. இன்று நடக்க இருக்கும் போட்டியில் விராட் கோலியை சமாளிக்க ரோகித் சர்மா இந்த ஒரு திட்டத்தை கையில் எடுத்தே ஆகவேண்டும். இல்லையெனில் கோலியை சமாளிப்பது கஷ்டம் தான் என்றே கூறலாம்.

விராட் கோலி இந்த தொடர் முழுவதும் ஓபனிங் விளையாடப் போகிறேன் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டார். அவர் அறிவிப்பதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது. இதுவரை ஓபனிங் பேட்ஸ்மேனாக அவர் ஓபனிங் ஆடிய அனைத்து மேட்ச்களையும் சேர்த்து பார்க்கையில், அவரது ஆவரேஜ் விகிதம் 47.96 ஆகும்.

மேலும் 2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவர் அனைத்து மேட்சிகளிலும் ஓபனிங் விளையாடி, அந்த தொடர் முழுவதும் அவர் அடித்த ரன்கள் 973 ஆகும். அதில் நான்கு சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி அடித்த 973 ரன்கள் தான் ஒரு சீசனில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் ஆகும். எனவே இதன் அடிப்படையில் விராட் கோலியின் தொடர் முழுவதும் ஓபனிங் விளையாட போகிறார் என்று கூறியுள்ளார்.

kohli

இன்று நடக்க இருக்கும் போட்டியில் விராட் கோலியை சமாளிக்க ஜஸ்பிரித் பும்ரா மற்றும் போல்ட் ஜோடியை ரோகித்சர்மா பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை ஜஸ்பிரித் பும்ரா விராட் கோலியை மூன்று முறை அவுட் ஆக்கியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை 30 முறை இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து உள்ளார்.

- Advertisement -

Kohli-ABD

எனவே ரோகித் சர்மா ஜஸ்பிரித் பும்ரா மற்றும் போல்ட் ஜோடியை கொண்டு, துவக்க ஓவர்களிலேயே விராட் கோலியை இன்று நடக்கவிருக்கும் போட்டியில் நெருக்கடிக்கு ஆளாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.