MI vs SRH : மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான சூப்பர் ஓவர் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமை

Hardik

நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி கடைசி வரை பரபரப்பாக சென்று சூப்பர் ஓவர் வரை சென்று மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த அருமையான போட்டியின் சூப்பர் ஓவர் வீடியோ இதோ :

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 58 பந்தில் 69 ரன்களை குவித்தார், ரோஹித் 24 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Rohith

அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து டை செய்தது. அந்த அணியின் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 47 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது.

Manish Pandey

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 4 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதற்கடுத்து மும்பை அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி படுத்தினார் பாண்டியா. பிறகு 4 பந்துகளில் 9 ரன்கள் அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது.