நேற்றைய மும்பை – ஹைதராபாத் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததா ? – ரசிகர்கள் கொந்தளிப்பு

pandey 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு லீக் ஆட்டங்கள் நேற்று ஒரே நேரத்தில் நடைபெற்றன. துபாயில் நடைபெற்ற ஒரு போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதேபோன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்நிலையில் இந்த மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக ரசிகர்கள் பரவலான கருத்துக்களை சமூகவலைத்தளம் மூலமாக பகிர்ந்தனர். ஏனெனில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் முதலில் பேட்டிங் செய்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

ishan
ishan MI

இந்நிலையில் அதே போன்று டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 235 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சனங்களை தொடர்ச்சியாக எழுப்பினர். இந்த போட்டியில் மும்பை அணி தான் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதன் படியே அவர்கள் எவ்வாறு டாசில் வெற்றி பெற்றார்கள் ? அதுமட்டுமின்றி 235 ரன்கள் அவர்கள் குடிப்பதற்கு காரணமும் மேட்ச் பிக்சிங் தான் என்று ரசிகர்கள் மேட்ச் பிக்ஸிங் டேகை வைரலாக்கினர்.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் அப்படி எல்லாம் ஒரு பிக்சிங்கும் நடைபெறவில்லை ஏனெனில் மும்பை அணி பிளே ஆப்புக்கு செல்ல 171 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சின் போது சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 193 ரன்கள் அடித்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதன் காரணமாக மும்பை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

Pandey 1
Pandey SRH

இதனால் இந்த போட்டியில் எந்த வித மேட்ச் பிக்சிங்கும் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது மேட்ச் பிக்சிங் ஹேஷ் டேக் படிப்படியாக குறைந்தது. எப்போதுமே மும்பை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அம்பயர், அம்பானி என ஏதாவது ஒன்றை சொல்லி போட்டி பிக்சிங் செய்யப்பட்டுவிட்டது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிடுவது புதிது கிடையாது.

- Advertisement -
Pandey
Pandey SRH

இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டில் இது போன்று குறிப்பிட்ட போட்டிக்காக பிக்சிங் செய்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் போட்டியின் தன்மை எவ்வாறு இருக்கிறதோ அதைப் போன்றுதான் ஆட்டமும் நடைபெறும் என்பதன் காரணமாக நேற்றைய போட்டியில் மும்பை அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் 235 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க : உலகக்கோப்பையில் ஹார்டிக் பாண்டியா பந்து வீசுவாரா ? – கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

ஆனால் சன்ரைசர்ஸ் அணி அவர்களை பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக நேற்றைய போட்டியில் எந்த வித மேட்ச் பிக்சிங்கும் நடைபெறவில்லை என்பதே உண்மை.

Advertisement