19 ஆவது ஓவர் வரை சென்னை பக்கம் இருந்த வெற்றி 20 ஆவது ஓவரில் திரும்பியது எப்படி – விவரம் இதோ

polly

ஐபிஎல் தொடரின் 27ஆவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களின் முடிவில் டு பிளிசிஸ்(50) மொயின் அலி(58) மற்றும் ராயுடு(72) ஆகியோரது அதிரடி அரைசதம் காரணமாக 218 ரன்கள் குவித்தது.

rayudu 2

இதன் காரணமாக 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி பொல்லார்டின் அசுரத்தனமான அதிரடி ஆட்டத்தினால் 20வது ஓவரின் கடைசி பந்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என 87 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்து கொடுத்தார்.

இந்நிலையில் 19வது ஓவர் வரை சென்னை அணியின் கைகளிலிருந்த வெற்றி 20 ஆவது ஓவரில் எவ்வாறு மாறியது என்பது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் காண்போம். கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் 19-வது ஓவரை வீசிய சாம் கரன் முதல் இரண்டு பந்துகளில் சிக்சர்களை கொடுத்தாலும் 4-வது பந்தில் ஹாட்ரிக் பாண்டியா மற்றும் ஆறாவது பந்தில் நீஷம் ஆகிய இருவரையும் வீழ்த்தி அசத்தினார். அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது.

pollard

அதன் பிறகு இறுதி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது போது பொல்லார்ட் மற்றும் குல்கர்னி ஆகியோர் களத்தில் இருந்தனர். இதன்காரணமாக சென்னை அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்றவாரே 20வது ஓவரின் முதல் பந்து டாட் பால் ஆக 5 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த வேலையில் எளிதாக சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யார்க்கராக வீசப்பட்ட இரண்டாவது பந்தை பவுண்டரியாக மாற்றினார். அதன் பிறகு மூன்றாவது பந்திலும் பவுண்டரி அடித்தார்.

- Advertisement -

pollard 1

பின்னர் 3 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4-வது பந்து டாட் பாலாக வீசப்பட போட்டி மேலும் பரபரப்பானது. கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் புல் டாஸாக வீசப்பட்ட 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டினார். அதன் பின்னர் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க 16 ரன்களை அசாத்தியமாக எடுத்து இந்த மிகப்பெரிய சேஸிங்கை மும்பை அணிக்காக பொல்லார்ட் வெற்றிகரமாக செய்து முடித்துக் கொடுத்தார். மும்பை அணியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.