அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் இறுதியில் வெளுத்து கட்டிய மும்பை – டெல்லி அணிக்கு இமாலய இலக்கு

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபயர் போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதி வருகின்றன.

dcvsmi

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் அடித்தது. இந்த போட்டியின் துவக்க வீரரான டிகாக் 40 ரன்களும், மூன்றாம் வரிசையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 51 ரன்களையும் அடித்து நன்றாக துவங்கினர்.

ஆனால் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் மிடில் ஓவர்களில் விழுந்தன. டிகாக், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற க்ருனால் பாண்டியா வந்த வேகத்திலேயே 13 ரன்களுக்கு திரும்பினார். பொல்லார்ட் 0 ரன்களில் டக் அவுட் ஆனார்.

Ishan kishan

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து மும்பை அணி சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்த்த இறுதி நேரத்தில் இஷன் கிஷன் 30 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 55 ரன்களையும், 14 பந்துகளை சந்தித்த ஹார்டிக் பாண்டியா 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவிக்க கடைசி 4 ஓவர்களில் 60 ரன்கள் அடிக்கப்பட்டு 200 ரன்களை எடுத்தது.

- Advertisement -

krunal

இதனால் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் டெல்லி அணி தற்போது முதல் இரண்டு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.