சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணி படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மாற்றம் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 52 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.3 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையில் நிர்ணயித்த இலக்கை எளிதாக எட்டி வெற்றி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 60 ரன்களையும் கிறிஸ் கெயில் 43 ரன்களும் குவித்தனர்.

Rahul

எல்லா அணிகளுமே முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை அடிக்க முயற்சிக்கும். ஆனால் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டுமே குவித்தது. இவ்வளவு மெதுவாக மும்பை அணி ஆடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் ரோகித் சர்மா மற்றும் டிகாக் பேட்டிங் ஆர்டர் வந்தனர். டிகாக் முதல் 5 பந்துகளை பிடித்து 3 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர் இஷன் கிஷன் பேட்டிங் ஆட வந்தார். இருந்த போதிலும் முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஆமை வேகத்தில் ரன் குவித்தது.

6 ஓவர் முடிவில் ரோகித் சர்மா 16 பந்துகளில் 13 ரன்கள் குவித்து இருந்தார். இஷன் கிஷன் 15 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் குவித்தார். இதன் மூலமாக முதல் 6 ஓவர்களில் மும்பை அணி என்கிற ஸ்கோரை 21-1 எடுத்தது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் மிக கம்மியான பவர் பிளே ஸ்கோர் ஆகும். அதேபோல ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இது நான்காவது மிக கம்மியான பவர் பிளே ஸ்கோர் ஆகும்.

சென்னை மைதானத்தில் அதனுடைய 5 போட்டிகளில் முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு வெற்றிகள் மற்றும் 3 தோல்வியுடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே மும்பை அணிக்கு 4 போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் முதலாவது போட்டி வருகிற 29-ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கிறது.

- Advertisement -