ஐபிஎல் தொடரின் முப்பத்தி நான்காவது (34) ஆவது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே இந்த தொடரில் 8 போட்டிகளில் 4 தோல்வியை சந்தித்துள்ள மும்பை அணிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கொல்கத்தா அணியும் 8 போட்டிகளில் 3 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

அதனால் இந்த போட்டி மும்பை அணியை விட கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடைசியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் பாண்டியா ஆகியோர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்றைய போட்டிக்கான மும்பை அணியின் பிளேயிங் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) குயின்டன் டிகாக், 3) சூரியகுமார் யாதவ், 4) இஷான் கிஷன், 5) க்ருனால் பாண்டியா, 6) பொல்லார்டு, 7) திவாரி / ஹார்டிக் 8) ராகுல் சாகர், 9) பும்ரா, 10) ட்ரென்ட் போல்ட், 11) ஆடம் மில்னே



