சென்னையை எதிர்க்கவுள்ள மும்பை அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

- Advertisement -

இந்தியாவில் துவங்கி நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. தற்போது எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

CskvsMi

- Advertisement -

நாளைய முதல் போட்டியில் இவ்விரு அணிகளும் துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் நாளைய போட்டியில் மும்பை அணியில் எந்தெந்த வீரர்கள் ? இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடப்புச் சாம்பியனான மும்பை அணி நாளைய போட்டியில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் துவக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்குவார்கள். அதேபோன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடுவார்கள்.

boult

அது தவிர்த்து ஆல்-ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பொல்லார்டு ஆகியோர் விளையாடுவார்கள். பந்துவீச்சாளர்களை பொருத்தவரை பும்ரா, ராகுல் சாகர் ஆகியோரும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களாக நாதன் குல்டர் நைல் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் விளையாடுவது உறுதி. முதல் போட்டிக்கான மும்பை அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) குவின்டன் டிகாக், 3) சூரியகுமார் யாதவ், 4) இஷான் கிஷன், 5) ஹார்டிக் பாண்டியா, 6) க்ருனால் பாண்டியா, 7) பொல்லார்டு, 8) குல்டர் நைல், 9) ராகுல் சாகர், 10) பும்ரா, 11) ட்ரென்ட் போல்ட்

Advertisement