சென்னை அணியில் மாற்றம் இல்ல. ஆனா மும்பை அணி செய்த 2 மாற்றங்கள் – பிளான் இதுதானா ?

cskvsmi

ஐபிஎல் தொடரின் 27 வது லீக் போட்டி இன்னும் சில நிமிடங்களில் டெல்லி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் இரண்டு சாம்பியன் அணிகளான இவ்விரு அணிகளும் இந்த போட்டியில் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

CskvsMi

அதனால் இன்றைய போட்டியை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறும். இந்நிலையில் சற்று முன்னர் போடப்பட்ட டாசிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்நிலையில் சென்னை அணியில் எந்தவித மாற்றமும் இல்லை என டாஸிற்கு பிறகு தோனி அறிவித்தார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் சற்று பலமாக இருப்பதால் கடந்த போட்டியில் விளையாடிய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா செய்துள்ளார்.

Neesham

அந்த மாற்றங்கள் யாதெனில் கூல்டர்நைலுக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த பேட்டிங் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் அணியில் இணைந்துள்ளார். அதே போன்று மற்றொரு மாற்றமாக ஜெயந்த் யாதாவிற்கு பதிலாக தவால் குல்கர்னி இணைந்துள்ளார். இந்த இரண்டு முக்கிய மாற்றங்களையும் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்கு எதிராக செயல்படுத்தி உள்ளார். ஏனெனில் இந்த வருடம் முழுவதுமே மும்பை அணியின் பேட்டிங் சற்று சுமாராக இருப்பதால் பேட்டிங் ஆல்ரவுன்டரை அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஜிம்மி நீஷமை ரோஹித் சிஎஸ்கே அணிக்கு எதிராக இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -