ஐ.பி.எல் தொடர் மீண்டும் நடக்கலனா மும்பை அணி ரசிகர்களுக்கு அது நல்லது தான் – பெருமையா பேசிக்கலாம்

Rohith
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 14 வது ஐபிஎல் தொடர் தற்போது வீரர்களுக்கு இடையே பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் நேற்று முன்தினம் வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. 29 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்த ஐபிஎல் தொடரானது பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதற்கு முன்னர் கொரோனாவில் சிக்கி அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

sandeep

- Advertisement -

கொல்கத்தா அணியின் வீரரான வருண் சக்கரவர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் மூவரும் இன்றைய பரிசோதனையில் டெல்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் அணி சார்பாக சஹா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட வீரர்களிடையே இந்த தொற்று அதிகமாக பரவும் அபாயம் காரணமாக இந்த தொடரானது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்த தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து மட்டுமின்றி இந்த வருட சாம்பியன் யார் என்பது குறித்தும் அதிக அளவில் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் இருந்து வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு தொடர் மீண்டும் தொடங்காமல் இந்த தொடர் முழுவதுமாக கைவிடப்பட்டால் எந்த அணியும் சாம்பியன் கிடையாது என்றும் இந்த தொடரில் வெற்றி தோல்வியாளர்கள் யாருமில்லை பரிசுகளும் கிடையாது என்ற விதிமுறையை செயல்படும்.

IPL

அதன்படி இந்த தொடர் நடைபெறாமல் போனால் கடந்த ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கும் போது நடப்பு சாம்பியனாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும். எனவே இந்த தொடர் நடைபெறாமல் போனால் ஐபிஎல் நடப்பு சாம்பியனாக மும்பை அணியே திகழும் என்பது மும்பை ரசிகர்களுக்கு இது சிறப்பான ஒன்றுதான்.

Advertisement