உலககோப்பைக்கு முன்னதாகவே பாண்டியா விடயத்தில் முக்கிய முடிவை எடுத்த மும்பை இந்தியன்ஸ் – வெளியான தகவல்

Hardik-Pandya
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யப்பட இருக்கிறார் என்பது குறித்த செய்திகளே அதிக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக கேப்டன்சி செய்து வரும் பாண்டியா கேப்டனாக அறிமுகமாகிய தொடரிலேயே அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார்.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசைக்க முடியாத அணியாக குஜராத் இருந்த வேளையில் கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், டிரேடிங் செய்யும் வீரர்களையும் அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

அதன்படி அடுத்த மாதம் துபாயில் ஐபிஎல் மினி ஏலமானது நடைபெற உள்ள வேளையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு இடையே டிரேடிங் செய்யும் வீரர்கள் குறித்த விவரங்களையும், வெளியேற்ற இருக்கும் வீரர்களின் குறித்த விபரங்களையும் நவம்பர் 26-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும் டிரேடிங் செய்யும் வீரர்களையும் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் மூலமாக ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வார் என்றும் மும்பை அணியில் இருந்து ஆர்ச்சர் அல்லது கேமரூன் கிரீன் இருவரில் ஒருவர் குஜராத் அணிக்காக மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது. மேலும் ஹர்டிக் பாண்டியா மும்பை அணிக்கு மாறிய பின்னர் கேன் வில்லியம்சன் அல்லது ரஷீத் கான் இருவரில் ஒருவர் கேப்டன் பொறுப்பினை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட இருக்கும் ஹார்டிக் பாண்டியா – இந்த சண்டை தான் காரணமாம்

அதேபோன்று மும்பை அணிக்கு மாறும் ஹார்டிக் பாண்டியா ஓராண்டு சாதாரணமான வீரராக விளையாடிய அடுத்த ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டன்சி பொறுப்பேற்பார் என்ற ஒரு தகவலும் அதிகளவு பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஹார்டிக் பாண்டியாவின் இந்த மாற்றம் குறித்த முடிவினை 50 ஓவர் உலககோப்பைக்கு தொடருக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி கையிலெடுத்ததாகவும் கிட்டத்தட்ட அவரது மாற்றம் உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement