- Advertisement -
ஐ.பி.எல்

வீடியோ : முதல் ஓவரிலேயே ஹைதராபாத் கதையை முடித்த ட்ரெண்ட் போல்ட், கண்ணீரில் மும்பை ரசிகர்கள் – காரணம் என்ன

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 203/5 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (22) ரன்களும் யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரியுடன் 54 (37) ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 55 (32) ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 204 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் 3வது பந்தில் அபிஷேக் ஷர்மாவை 0 (3) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி 5வது பந்தில் அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் டக் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே கதையை முடித்தார் என்று சொல்லலாம்.

- Advertisement -

மும்பை ரசிர்கள் பரிதாபம்:
ஏனெனில் அதிலிருந்து மீள முடியாத ஹைதராபாத் ஹரி ப்ரூக் 13 (21), மயங் அகர்வால் 27 (23), வாஷிங்டன் சுந்தர் 1 (5), கிளன் பிலிப்ஸ் 8 (6) என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது. இறுதியில் அப்துல் சமத் 32* (32), அடில் ரசித் 18 (13), உம்ரான் மாலிக் 19* (8) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்தும் 20 ஓவர்களில் 131/8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத்தை சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

அதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே 2 போல்ட் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியதை பார்த்து மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் விடாத குறையாக சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏனெனில் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் புதிய பந்தில் துல்லியமான லைனில் கச்சிதமாக வீசி ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை கொண்ட நவீன கிரிக்கெட்டின் மகத்தான இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவரை 2020 சீசனில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முதல் முறையாக வாங்கியது. அந்த வருடம் 25 விக்கெட்டுகளை எடுத்து 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2021 சீசனிலும் 16 விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அப்படிப்பட்ட அவரை 2022 சீசனில் தக்க வைக்காமல் கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் மெகா ஏலத்திலும் வாங்க தவறியது. மறுபுறம் 8 கோடி கொடுத்து வாங்கிய ராஜஸ்தானுக்கு கடந்த வருடம் 13 விக்கெட்டுகளை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடமும் ஆரம்பத்திலேயே அசத்த துவங்கியுள்ளார்.

ஆனால் இஷான் கிசானுக்காக அவரையும் குயின்டன் டீ காக்கை’யும் கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக முதல் 6 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கி கூட தகுதி பெறாமல் வெளியேறியது. குறிப்பாக நம்பி தக்க வைக்கப்பட்ட இசான கிசான் கடந்த வருடம் மட்டும் இல்லாமல் இந்த வருடமும் மும்பை அணிக்காக சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க:வீடியோ : ஹெலிகாப்டர் சிக்ஸர் விளாசி தோனியின் சாதனை சமன் – மும்பையை தனி ஒருவனாக தாங்கிய வருங்கால ஸ்டார் திலக் வர்மா

மேலும் பொதுவாகவே தரமான பந்து வீச்சு கூட்டணியை கொண்ட மும்பை அவர் வெளியேறியதால் கடந்த வருடம் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் கூட்டணியாக மோசமாக செயல்பட்டது. அதனால் பவர் பிளே ஓவர்களில் ட்ரெண்ட் போல்ட் விக்கெட் எடுப்பதை பார்ப்பது தங்களது மனதுக்கு வேதனையை கொடுப்பதாக சமூகவலைதளங்களில் மும்பை ரசிகர்கள் வெளிப்படையாகவே வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -