இன்னைக்கு எதிர்க்கும் இதே ரசிகர்கள்.. சீக்கிரம் பாண்டியாவுக்காக அதை செய்வாங்க.. இஷான் கிசான் பேட்டி

Ishan Kishan 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவையை கழற்றி விட்ட மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு ஆரம்பம் முதலே மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த சூழ்நிலையில் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார். அதனால் கோபமடைந்த ரசிகர்கள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய சொந்த கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போக பாண்டியா தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் சந்தித்த 2 தோல்விகளையும் மும்பை ரசிகர்கள் கொண்டாடினர்.

- Advertisement -

ரசிகர்கள் மாறுவாங்க:
இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வெற்றிகளை பெற்றதால் தற்போது ரசிகர்களின் எதிர்ப்பு தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் ரசிகர்களின் எதிர்ப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் பாண்டியா எதிர்கொண்டதாக இசான் கிசான் தெரிவித்துள்ளார். அத்துடன் வெற்றிப் பாதைக்கு அணி திரும்பியுள்ளதால் தற்போது எதிர்ப்பு வெளிப்படுத்தும் அதே மும்பை ரசிகர்கள் மீண்டும் பாண்டியாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் சவால்களை விரும்புகிறார். இந்த சூழ்நிலையில் அவர் ஏற்கனவே இருந்துள்ளார். தற்போதும் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் அவர் அதை வெளிப்படையாக பேசுபவர் கிடையாது. அவர் களத்திற்கு வெளியே மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதை நான் அறிவேன். அதில் அவர் வித்தியாசமான லெவலில் செயல்படக் கூடியவர்”

- Advertisement -

“அவருடன் நானும் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் இந்த எதிர்ப்புகளால் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதை எதிர்கொள்வதற்கு அவர் தயாராகவும் இருக்கிறார். ஏனெனில் நீங்கள் ரசிகர்கள் மீது புகார் செய்ய முடியாது. ரசிகர்கள் தங்களுடைய பார்வையில் கருத்து சொல்ல வருவார்கள். இருப்பினும் பாண்டியா போன்றவர் எப்போதும் சவாலை விரும்பக் கூடியவர்”

இதையும் படிங்க: நல்லவேள ரிட்டையராகிட்டேன்.. அவரை விட சூரியகுமார் பெஸ்ட் டி20 பேட்ஸ்மேன்.. ஹர்பஜன் வியப்பான பாராட்டு

“வரும் போட்டிகளில் அவர் பேட்டிங்கில் நன்றாக செயல்படுவார். அப்போது ரசிகர்கள் மீண்டும் அவரை விரும்பத் துவங்குவார்கள். ஏனெனில் நீங்கள் நன்றாக செயல்படும் போது ரசிகர்கள் உங்களுடைய கடின உழைப்புக்கு மரியாதை கொடுப்பார்கள். சில நேரங்களில் ரசிகர்கள் உங்கள் மீது கடினமாக இருப்பார்கள். ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் நன்றாக விளையாடினால் அது மாறும். இன்று என்றாலும் நாளை மாறும். நாளை இல்லை என்றால் அதற்கடுத்த நாள் மாறும்” என்று கூறினார்.

Advertisement