நல்லவேள ரிட்டையராகிட்டேன்.. அவரை விட சூரியகுமார் பெஸ்ட் டி20 பேட்ஸ்மேன்.. ஹர்பஜன் வியப்பான பாராட்டு

Harbhajan Singh 4
- Advertisement -

அனல் பறக்க நடந்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்று அசத்தத் துவங்கியுள்ளது. இந்த வருடம் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் பாண்டியா தலைமையில் முதல் 3 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த மும்பை பின்னடைவை சந்தித்தது.

அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையில் முதுகெலும்பாக கருதப்படும் சூரியகுமார் யாதவ் ஆரம்பகட்ட போட்டிகளில் காயத்தால் விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள சூரியகுமார் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு 52 ரன்களை விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு பங்காற்றினார்.

- Advertisement -

ஹர்பஜன் வியப்பு:
அந்த வகையில் சூரியகுமார் யாதவ் வந்து அதிரடியாக விளையாடத் துவங்கியதுமே மும்பையின் பேட்டிங் வரிசை தற்போது மீண்டும் வலுவானதாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் எப்படி பந்து வீசினாலும் சூரியகுமார் அதை நாலாபுறமும் அடித்து நொறுக்குவதாக ஹர்பஜன் சிங் வியப்புடன் பாராட்டியுள்ளார். அதனால் தற்போது அவருக்கு எதிராக தான் விளையாடாமல் ஓய்வு பெற்றுள்ளதை நினைத்து நிம்மதியடைவதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார்.

அத்துடன் ஏபி டீ வில்லியர்ஸை விட சூரியகுமார் 360 டிகிரியில் அடிப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் போல ஆதிக்கம் செலுத்தும் ஒருவரை நான் பார்த்ததில்லை. அவருடைய ஆட்டத்தை நம்ப முடியவில்லை. அவருக்கு எதிராக எங்கே நீங்கள் பந்து வீசுவீர்கள்? நல்லவேளையாக தற்போது நான் கிரிக்கெட்டில் விளையாடவில்லை”

- Advertisement -

“ஏனெனில் இந்தப் பையனுக்கு எதிராக நீங்கள் எங்கே பந்து வீச முடியும். அவரிடம் ஒய்ட் யாரக்கர், பவுன்சர் போன்ற ஒவ்வொரு பந்துக்கும் பதில் இருக்கிறது. ஸ்வீப், அப்பர் கட் ஷாட்டுகளை அடிக்கும் அவரால் இதற்கு மேல் எப்படி விளையாட முடியும் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் வித்தியாசமான வீரர். சூரியகுமார் வித்தியாசமான லீக்கில் விளையாடுகிறார்”

இதையும் படிங்க: குல்தீப் மேஜிக்கால் 94/7 என திண்டாடிய லக்னோ.. டெயில் எண்டருடன் சேர்ந்து 100% வெற்றி இலக்குக்கு காப்பாற்றிய படோனி

“அவர் ஜொலிக்கும் போது யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. நாம் ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நம்ப முடியாத வீரரை பார்த்துள்ளோம். இவர் ஏபி டீ வில்லியர்ஸின் சிறந்த வெர்ஷன் என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் அவரை விட தற்போது மும்பை அணிக்கு யாரும் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்கள் என்று நான் நினைக்கவில்லை” என கூறினார்.

Advertisement