9 ஆவது ஆண்டாக மும்பை அணிக்கு தொடரும் சோகம். பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணம் இதுதான்

RcbvsMi-1
- Advertisement -

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று ஐபிஎல் தொடரின் 14வது சீசனுக்கான முதல் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும், கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கும் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி சென்னை மைதானத்தின் தன்மையை கழித்து முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.

mivsrcb

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் கிறிஸ் லின் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை வீரர்கள் ரோஹித், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்டிக் பாண்டியா பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை. அதற்கு காரணம் பெங்களூரு அணியின் பந்துவீச்சு இன்று சிறப்பாக இருந்தது. எப்போதுமே பந்துவீச்சில் சற்று சொதப்பும் பெங்களூரு அணியின் பவுலர்கள் இம்முறை சிறப்பாக பந்து வீச்சில் செயல்பட்டனர்.

சிராஜ் 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோன்று அதிக விலைக்கு ஏலம் போன நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமின்றி சைனிக்கு மாற்று வீரராக களமிறங்கிய ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

harshal

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக கேப்டன் விராட் கோலியும், தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். சுந்தர் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், கோலி 33 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். அதன் பின்னர் இந்த வருடமாவது சிறப்பாக விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் முதல் போட்டியிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 39 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன் பின்னர் வழக்கம்போல் ஏபி டிவிலியர்ஸ் இறுதிவரை நின்று 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதி நேரத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி இந்த தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரின் துவக்க போட்டியில் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை துவக்க போட்டிவரை மும்பை அணி 9 தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement