தோற்றாலும் மீசைய முறுக்கும் அளவுக்கு உலகசாதனை படைத்த மும்பை – வெற்றிகரமான டீம் என ரசிகர்கள் கெத்து

MI Mumbai Indians
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் வெற்றிகரமாக ஒரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு மாதங்களாகியும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பைக்கு மட்டும் இந்த தொடர் வெற்றிகரமாக அமையவில்லை. ஏற்கனவே தொடர் தோல்விகளால் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேறியுள்ள நிலையில் தனது 11-வது லீக் போட்டியில் கொல்கத்தாவை நேற்று எதிர் கொண்டது. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 165/9 ரன்கள் சேர்த்தது.

ROhit Sharma MI vs KKR

- Advertisement -

அந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 43 (24), நிதிஷ் ராணா 43 (26) ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்க்க அஜிங்கிய ரஹானே 25 (24) ரின்கு சிங் 23* (19) ஆகியோர் தேவையான ரன்களை சேர்த்தனர். மும்பை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும் குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

கொல்கத்தா வெற்றி:
அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 2 (6) திலக் வர்மா 6 (5) ரமந்தீப் சிங் 12 (16) டிம் டேவிட் 13 (9) என முக்கிய டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அந்த சமயத்தில் அரைசதம் கடந்து 51 (43) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய இஷான் கிஷனும் ஆட்டமிழந்ததால் மும்பையின் தோல்வி உறுதியானது. இறுதியில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட்டும் 15 (16) ரன்களில் ஏமாற்றியதாலும் இதர வீரர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதாலும் 17.3 ஓவரில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை படுதோல்வியை சந்தித்தது.

MI Jaspirt Bumrah

கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அசத்திய பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் அன்ரே ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த கொல்கத்தா பங்கேற்ற 12 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பி பங்கேற்ற 11 போட்டிகளில் 9-வது தோல்வியை பதிவு செய்த மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டது.

- Advertisement -

மீசைய முறுக்கு:
முன்னதாக இந்த வருடம் தனது முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனை படைத்தது. மேலும் நேற்று சந்தித்த தோல்வியால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்த மும்பை மீண்டும் ஒரு பரிதாப சாதனை படைத்துள்ளது. மொத்தத்தில் வரலாற்றிலேயே இதுதான் மும்பைக்கு படுமோசமான வருடமாக அமைந்துள்ளது.

Rohit Sharma vs KKR Shreyas Iyer

ஆனாலும் தோல்வியிலும் மீசையை முறுக்கும் வகையில் நேற்றைய போட்டியையும் சேர்த்து உலகிலேயே 250 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பிரம்மாண்ட உலக சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. ஆம் கடந்த 2008 ஐபிஎல் தொடங்கப்பட்டபோது தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி சாம்பியன்ஸ் லீக் உட்பட இதுவரை மொத்தம் 250* போட்டிகளில் விளையாடி இந்த உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல் இதோ:
1. மும்பை இந்தியன்ஸ் : 250* போட்டிகள்
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 239 போட்டிகள்
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : 238 போட்டிகள்
4. சோமர்செட் : 237 போட்டிகள்
5. சென்னை சூப்பர் கிங்ஸ்/ஹம்ஷயர் : தலா 230 போட்டிகள்

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் அந்த அணிக்காக 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்காக போராடிய பும்ரா தோல்வி அடைந்தாலும் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த அணி (5 முறை) என்ற சாதனையும் மும்பை படைத்தது.

Mumbai Indians MI

மும்பை கெத்து:
வரலாற்று தோல்வியை சந்தித்தாலும் கூட இப்படி ஒரு அசத்தலான உலக சாதனை படைத்துள்ளதால் மும்பை அணி ரசிகர்கள் நிச்சயமாக பெருமை கொள்ளலாம். ஏனெனில் எதிலுமே தொடர்ச்சியான வெற்றி என்பது நிலையல்ல, யானைக்கும் அடி சறுக்கும் என்ற நிலையில் இன்னும் கூட ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை தான் என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் முதல் கோப்பையை வெல்வதற்கே 15 வருடங்களாக இன்னும் திணறி வரும் நிலையில் அசால்டாக 5 கோப்பைகளை வென்றுள்ள எங்களின் மும்பை இந்த வருடம் தோற்றாலும் கூட வெற்றிகரமான அணியே என்று அந்த அணியின் ரசிகர்கள் கெத்தாக சமூக வலைதளங்களில் காலரை தூக்கிவிட்டு வருகின்றனர்.

Advertisement