MI vs RCB : கட்டுக்கடங்காத சூறாவளியாக ஆர்சிபி’யை நொறுக்கிய சூரியகுமார் – சாதனை வெற்றியால் மும்பை டபுள் மாஸ் முன்னேற்றம்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இரு அணிகளுமே தலா 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கீழ் வரிசையில் இருந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு விராட் கோலி முதல் ஓவரிலேயே 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 (4) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 16/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்த களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் உடன் இணைந்து தனது பங்கிற்கு சரவெடியாக விளையாடி முதல் ஆளாக அரை சதமடித்தார். அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவர் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 68 (33) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் 1 (3) ரன்னில் பெவிலியன் சென்றார்.

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் டு பிளேஸிஸ் 65 (41) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (18) ரன்கள் எடுத்தார். அதனால் 220 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூருவுக்கு கடைசி நேரத்தில் ஹஸரங்கா 12* (8) ரன்கள் எடுத்தும் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கேதர் ஜாதவ் வெறும் 12* (10) ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவர்களில் 199/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு டெத் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்ஃடாப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய மும்பைக்கு சரவெடியாக விளையாடிய இசான் கிசான் 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 பவுண்டரி 4 சிக்சருடன் 42 (21) ரன்கள் குவித்து ஹஸரங்கா சுழலில் ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் மறுபுறம் தடவலாக செயல்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா அதே ஓவரில் 7 (8) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல தனது பாணியில் முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் மைதானத்தின் 360 டிகிரியிலும் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அவருக்கு இளம் வீரர் நேஹல் வதேரா அதிரடியாக கைகொடுத்ததால் ஓவருக்கு 10க்கும் மேற்பட்ட ரன்களை விளாசிய மும்பை விரைவாக இலக்கை எட்டியது. அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக செட்டிலாகி தங்களை அவுட் செய்வதற்கு பெங்களூரு போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிய இந்த ஜோடியில் கட்டுக்கடங்காமல் விளையாடிய சூரியகுமார் யாதவ் வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 16 ஓவர்கள் வரை சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றியை உறுதி செய்து 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (35) ரன்களை 237.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் டிம் டேவிட் டக் அவுட்டானாலும் நேஹல் வதேரா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52* (34) ரன்கள் எடுத்ததால் 16.3 ஓவரிலேயே 200/4 ரன்கள் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. ஹஸரங்கா, விஜய் குமார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் பெங்களூருவை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இப்போட்டியில் அளவில் மிகவும் சிறிய வான்கடே மைதானத்தில் 220 ரன்களை எடுப்பதற்கு நல்ல தொடக்கத்தை பெற்றும் இறுதியில் 20 ரன்களை எக்ஸ்ட்ரா எடுக்கத் தவறியது பெங்களூருருவின் தோல்விக்கு ஒரு காரணமானது.

இதையும் படிங்க: MI vs RCB : கட்டுக்கடங்காத சூறாவளியாக ஆர்சிபி’யை நொறுக்கிய சூரியகுமார் – சாதனை வெற்றியால் மும்பை டபுள் மாஸ் முன்னேற்றம்

ஆனால் சாதாரணமாகவே சுமாராக வீசும் அந்த அணி பவுலர்களை இன்று போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு சூரியகுமார் யாதவ் தன்னுடைய பேட்டிங்கால் துவம்சம் செய்து மும்பைக்கு எளிதான வெற்றி பெற்று கொடுத்தார். அதனால் பெங்களூருவுக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்த மும்பை புள்ளி பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் 8வது இடத்திலிருந்து நேராக சென்னைக்கு அடுத்தபடியாக 3வது இடத்திற்கு முன்னேறி மாஸ் காட்டியுள்ளது.

Advertisement