ஓய்வுபெற்ற இந்திய வீரரான பார்த்திவ் பட்டேலுக்கு புதிய பொறுப்பினை வழங்கிய மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

Parthiv
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் பட்டேல் நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றார். 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான பார்த்தீவ் பட்டேல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். அதன் பிறகு சில போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்த அவர் தோனியின் வருகைக்கு பின்பு அணியில் தேர்வாவது வெகுவாகக் குறைந்தது. மேலும் அப்போது மாற்று வீரராக மட்டுமே அவர் இந்திய அணியில் தேர்வாகி வந்தார்.

parthiv

- Advertisement -

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார் பார்த்திவ் பட்டேல். இந்நிலையில் தற்போது 35 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணிக்காக 2010ஆம் ஆண்டு, மும்பை அணிக்காக 2015 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்களை வென்ற போது அணியில் இடம் பெற்றிருந்தவர்.

2017 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் இவர் திகழ்ந்திருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் மொத்தம் ஆறு அணிக்காக விளையாடியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த 13 ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரப்படவில்லை.

Parthiv 1

இந்நிலையில் இவ்வளவு அனுபவம் கொண்ட இவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு புதிய பொறுப்பினை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக புதிய இளம் திறமைகளை கண்டறியும் குழுவில் பார்த்தீவ் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 11,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ள இவர் ஐபிஎல் தொடரிலும் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வீரர்.

Parthiv

இதன் காரணமாக உள்ளூர் திறமைகளை இவரால் சரியாக கண்டறிந்து தேர்வு செய்ய முடியும் என்பதனால் இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிவரும் திறமையான இளைஞர்களை இவர் கண்டறிந்து மும்பை அணிக்காக வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஓய்வினை அறிவித்த போது டி20 வடிவத்தில் தற்போது ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement