ஐபிஎல் 2022 : புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை – டெல்லி! இரண்டுல எது சூப்பர்னு சொல்லுங்க?

MIvsDC
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கி மே 29-ம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL
IPL Cup

இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட அசத்தலான ஐபிஎல் 2022 தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

தயாராகும் அணிகள்:
அந்த அட்டவணையின் படி முதல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இம்முறை 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன.

Ganguly-ipl
IPL MI

இந்த பிரிவுகள் என்பது இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பையை வென்றது மற்றும் எத்தனை முறை பைனலில் விளையாட உள்ளது என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாகவும் 4 முறை கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் குரூப் பி பிரிவில் முதல் அணியாகவும் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

மும்பை – டெல்லி ஜெர்ஸி வெளியீடு:
இதை அடுத்து இந்த தொடரில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பதற்காக இதர அணிகளை காட்டிலும் முன்கூட்டியே குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர வலை பயிற்சியை தொடங்கியுள்ளது.

SRH Jersey IPL 2022

இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வெல்வதற்காக தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்ஸியில் மாற்றங்களை செய்து சில அணிகள் புதிய ஜெர்சியை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் தங்களது புதிய ஜெர்ஸியை இன்று வெளியிட்டுள்ளன.

எது சூப்பரா இருக்கு:
அதில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய ஜெர்ஸியில் வழக்கமான தங்கம் கலந்த ஊதா நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த அணியின் ஸ்பான்சராக இந்த முறை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரபல கூல்டிரிங்ஸ் நிறுவனமான “ஸ்லைஸ்” பெயர் இடம் பெற்றுள்ளது. மொத்தத்தில் மும்பையின் பழைய ஜெர்ஸிக்கும் புதிய ஜெர்ஸிக்கும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்றே கூறலாம்.

IPL MI DC Jersey

இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஜெர்சியில் நிறைய மாற்றங்கள் காணப்படுகிறது. ஆம் கடந்த சீசன்களில் பெரும்பாலும் ஊதா நிறத்தை மையப்படுத்தி லேசான சிவப்பு நிறத்தை பயன்படுத்தியது போல அந்த அணியின் ஜெர்ஸி இருந்தது. ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஜெர்ஸியின் ஒருபுறம் ஊதா நிறமும் மறுபுறம் சிவப்பு நிறமும் இருக்க நடுவில் அந்த 2 நிறங்களும் கலந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய 2 அணிகள் வெளியிட்டுள்ள புதிய டிசைன் ஆடைகள் நன்றாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement