8 ஆவது போட்டியிலும் தோல்வி. மும்பை அணி தொடர்ந்து செய்யும் தவறு என்ன தெரியுமா ? – விவரம் இதோ

MI vs LSG
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தனது முதல் 7 போட்டிகளிலும் தொடர் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்த காரணத்தால் இப்போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு குயின்டன் டி காக் 10 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கேஎல் ராகுல் தனது அணிக்கு அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

KL Rahul 103

2-வது விக்கெட்டுக்கு 58 பார்ட்னர்ஷிப் ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் 22 (22) ரன்கள் எடுத்து மனிஷ் பாண்டே அவுட்டாக அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 0 (3) க்ருனால் பாண்டியா 1 (2) ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

கேஎல் ராகுல் 2-வது சதம்:
அதனால் 103/4 என நடுவரிசையில் தடுமாறிய லக்னோவுக்கு மறுபுறம் தொடர்ந்து போராட்டமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தது கேஎல் ராகுல் அரைசதம் கடந்தும் அவுட்டாகாமல் மும்பைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவரை அவுட் செய்ய கேப்டன் ரோகித் சர்மா போட்ட திட்டங்களை தவிடு பொடியாக்கிய கேஎல் ராகுல் கடைசி வரை அவுட்டாகாமல் 62 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்கள் சதமடித்து 103* ரன்கள் விளாசினார்.

KL Rahul Century

இது இந்த வருடம் அவர் அடிக்கும் 2-வது சதமாகும். ஆச்சர்யப்படும் வகையில் அந்த 2 சதங்களும் மும்பைக்கு எதிராக அவர் அடித்துள்ளார். ஒருபுறம் கேஎல் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் மறுபுறம் தீபக் ஹூடா 10 (9) ஆயுஷ் படோனி 14 (11) போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 168/6 ரன்களை மட்டுமே லக்னோ எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பொல்லார்ட் மற்றும் மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

மும்பை போராட்டம்:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு இஷான் கிசான் மீண்டும் தடுமாற்றம் நிறைந்த பேட்டிங் செய்ய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை குவித்தார். முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்த இந்த ஜோடியில் 8 (20) ரன்களை எடுத்த கிசான் கிசான் தடுமாற்றத்திற்கு பின் அவுட்டாக அடுத்து களமிறங்கிய இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் 3 (5) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் கடந்த போட்டியில் டக் அவுட்டான ரோகித் சர்மா இந்த முறை 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 39 (31) ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Pollard Mi

அதனால் 67/4 என தவித்த மும்பைக்கு அடுத்த ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கைரன் பொல்லார்ட் 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடிய நிலையில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (27) ரன்கள் எடுத்த திலக் வர்மா முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் அதிரடியாக விளையாடி காப்பாற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைரன் பொல்லார்ட்டும் கடைசி ஓவரில் 19 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் மும்பையின் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஓவர்களில் 132/8 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை மீண்டும் 36 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்களை எடுத்தார்.

வெளியேறிய மும்பைக்கான காரணம்:
இந்த தோல்வியால் பங்கேற்ற 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான வரலாற்றை படைத்து அவமானத்தை சந்தித்தது. ஏற்கனவே 7 போட்டிகளில் தோல்வி அடைந்து தன்னம்பிக்கை இழந்த மும்பை இந்த போட்டியில் எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற பதற்றத்தால் முதல் 10 ஓவர்களில் 60 ரன்களைக் கூட எடுக்கவில்லை. அதன் காரணமாக சேசிங் ரன்ரேட் எகிறிய நிலையில் கடைசி 10 ஓவர்களில் அனைத்து லக்னோ பவுலர்களும் துல்லியமாக பந்து வீசியதால் கடைசிவரை 166 என்ற சுலபமான இலக்கை அந்த அணியால் எட்ட முடியாமல் போனது.

Mumbai Indians MI

மேலும் இதன் காரணமாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்துள்ள ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 தொடரில் லீக் சுற்றுடன் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement