பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்த அடுத்து பந்திலேயே ஸ்டம்பை பறக்கவிட்ட பஞ்சாப் பவுலர் – வைரலாகும் வீடியோ

Padikkal-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

அதன்படி பஞ்சாப் அணி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ளது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து அவர்கள் 179 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்று அதிரடியாக விளையாடிய கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது. அதன்படி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். 6 பந்துகளை சந்தித்த படிக்கல் ஒரு சிக்சருடன் 7 ரன்கள் அடித்து ரிலே மெரெடித் ஓவரில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில் அவர் போல்டான பந்துக்கு முந்தைய பந்தினை தான் ஒரு சிக்சரை அற்புதமாக ஆப் சைடில் அடித்தார். அதன் பின்னர் மனம் தளராமல் பந்துவீசிய பவுலர் பந்தினை லென்ந்தாக வீச அதனை மீண்டும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்ட படிக்கல் இறங்கிவந்து அடிக்க நினைத்தார். ஆனால் அவர் பந்தினை அடிக்க தவறியதால் பந்து ஸ்டம்பினை பதம் பார்த்தது.

Advertisement