நேற்று ஓய்வை அறிவித்த மெண்டிஸ் ஒருவர் மட்டும்தான் இந்த சாதனையை படைத்துள்ளார் – சாதனை விவரம் இதோ

- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டீஸ் (வயது 34) இவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான மென்டிஸ் அறிமுகமான சில மாதங்களிலேயே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் உலகின் பல சிறந்த பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார்.

Mendis-2

- Advertisement -

மேலும் அவர் அறிமுகமான அதே 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டம் காண வைத்தார். மேலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி அவர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 19 போட்டிகளில் அவர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜந்தா மெண்டிஸ் செய்த சிறப்பான சாதனை ஒன்றினை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இதுவரை அஜந்தா மெண்டிஸ் தவிர வேறு யாரும் ஒருநாள் போட்டி,டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டி என மூன்று வகை கிரிக்கெட்டிலும் யாரும் 6 விக்கெட்டுக்களை ஒரு போட்டியில் கைப்பற்றியது கிடையாது.

mendis 1

அப்படிப்பட்ட சிறப்பான அந்த சாதனையை வைத்திருக்கும் ஒரே ஒரு வீரர் அஜந்தா மெண்டிஸ் மட்டும்தான். இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனை தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைத்தவிர வேறுயாரும் இந்த சாதனையை இதுவரை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement