இது என்னப்பா புதுசா இருக்கு? சதமடித்து சாதனை படைத்த மெஹதி ஹசன் வித்யாச பவுலிங் – ரசிகர்கள் வியப்பு

Mehidy Hasan No Ball
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா டிசம்பர் 7ஆம் தேதியான்று நடைபெற்ற 2வது போட்டியில் மீண்டும் முக்கிய நேரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டு 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் 69/6 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

குறிப்பாக கேப்டன் லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் போன்ற முக்கிய வீரர்களை அவுட்டாக்கியதால் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியாவை 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த முகமதுல்லா 77 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரை விட முதல் போட்டியில் கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்து 38* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தது போலவே இப்போட்டியிலும் மிரட்டிய மெகதி ஹசன் சதமடித்து 100* (83) விளாசியதால் 50 ஓவரில் வங்கதேசம் 271/7 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் விராட் கோலி 5, ஷிகர் தவான் 8, வாஷிங்டன் சுந்தர் 11, கேஎல் ராகுல் 14 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

சாதனையுடன் வித்யாச நோ-பால்:
இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஷ்ரேயஸ் ஐயர் முடிந்தளவுக்கு போராடி 82 ரன்களும் அக்சர் பட்டேல் 56 ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அதனால் வேறு வழியின்றி காயத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா கடைசியில் அதிரடியாக 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 51* (28) ரன்கள் எடுத்தும் டெயில் எண்டர்கள் கைகொடுக்க தவறியதால் 50 ஓவரில் 266/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வங்கதேச சார்பில் அதிகபட்சமாக எபோதத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை வென்ற வங்கதேசம் வலுவான இந்தியாவை தோற்கடித்து கத்துகுட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் புலி என்பதை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து 100* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய மெஹதி ஹசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் சற்று அதிர்ஷ்டத்துடன் அபார வெற்றி பெற வைத்த அவர் இப்போட்டியில் முழுக்க முழுக்க திறமையை மட்டுமே வெளிப்படுத்தி ஆரம்பத்தில் நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு தனது முதல் சதத்தை அடித்து இந்தியாவின் கதையை முடித்து அடுத்தடுத்த 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இப்போட்டியில் சதமடித்த அவர் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த 4வது வங்கதேச பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது இடத்தில் களமிறங்கி சதமடித்த முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2021இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து வீரர் சிமி சிங் மட்டுமே 8வது இடத்தில் களமிறங்கி இதேபோல் 100* ரன்களை அடித்திருந்தார். அப்படி வங்கதேசத்தின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் சதமடித்த ஆர்வத்தில் பந்து வீசும் போது ஒரே ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் அடுத்தடுத்த நோ பால் வீசியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

ஏனெனில் பொதுவாக வெள்ளை கோட்டுக்கு வெளியே காலை வைப்பதால் அல்லது இடுப்புக்கு மேலே வரும் நோ பால்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இவரோ பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தை கொடுக்கிறேன் என்ற பெயரில் ஸ்டம்ப்களுக்கு மிகவும் நெருக்கமாக சென்று பந்தை வீசிய போது பின்னங்காலை ஸ்டம்பில் இடித்து விட்டார். அதுவும் ஒருமுறையல்ல அடுத்தடுத்த 2 பந்துகளில் ஸ்டம்ப் மீது தனது கால் உரசும் அளவுக்கு தீவிரமாக பேட்ஸ்மேனை மட்டும் கவனித்து பந்து வீசினார். அதனால் அடிப்படை விதிமுறைப்படி அந்த 2 பந்துகளுக்கும் நடுவர் நோ-பால் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement