ஐ.சி.சி வெளியிட்ட தரவரிசை பட்டியல் : 2 ஆவது இடத்தினை பிடித்து வரலாற்று சாதனை நிகழ்த்திய – வங்கதேச வீரர்

Mehidy-hasan-1

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

mehidy hasan 3

இந்நிலையில் இந்த தொடர் முடிவதற்குள் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசை பட்டியல் வங்கதேச அணியை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி 23 வயதான மெஹதி ஹாசன் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

இளம் வயதிலேயே பங்களாதேஷ் அணிக்காக அறிமுகமாகிய அவர் தற்போது வரை தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பங்களாதேஷ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். நடைபெற்று முடிந்துள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். முதல் போட்டியில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி இருந்தார்.

mehidy hasan

இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதன் மூலம் ஐசிசி வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் அவர் ஐந்தாம் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் இடம் பிடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் பங்களாதேஷ் அணி சார்பாக படைத்துள்ளார்.

- Advertisement -

Mehidy-Hasan 2

இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு சாகிப் அல் ஹசன் முதலிடத்தையும், 2010ஆம் ஆண்டு அப்துர் ரசாக் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது மெஹதி ஹசன் ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement