ரஹீம் வேணும்னு செய்யல.. உ.கோ சம்பவம் எங்களுக்கே ரிட்டர்ன் ஆகிடுச்சு.. மெஹதி ஹசன் ஏமாற்ற பேட்டி

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் போன்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி டிசம்பர் 6ஆம் தேதி தலைநகர் தாக்காவில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 35 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் மற்றும் மிட்சேல் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து முதல் நாள் முடிவில் 55/5 என்ற திண்டாட்டமான நிலையில் விளையாடி வருகிறது. முன்னதாக அந்த போட்டியில் 47/4 என சரிந்த தம்முடைய அணியை நட்சத்திர வங்கதேச வீரர் முஸ்பிகர் ரஹீம் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார்.

- Advertisement -

ரிட்டர்ன் ஆகிடுச்சு:
ஆனால் கெய்ல் ஜெமிசன் வீசிய ஒரு ஓவரில் அவரின் பேட்டில் பட்ட பந்து ஸ்டம்பை நோக்கி சென்றது. அப்போது தம்மை அவுட்டாவதிலிருந்து காப்பாற்றுவதற்காக அந்த பந்தை கையால் தடுத்த ரஹீம் தள்ளி விட்டார். பொதுவாக அது போன்ற சூழ்நிலைகளில் பேட்ஸ்மேன்கள் பந்தை காலால் தடுக்கலாமே தவிர கையால் தடுக்கக்கூடாது என்பது விதிமுறையாகும்.

இருப்பினும் அதை மீறிய ரஹீம் பந்தை தடுத்ததற்காக அவுட்டான முதல் வங்கதேச வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார். இந்நிலையில் தங்களுடைய அணியில் வெள்ளந்தி வீரராக இருக்கக்கூடிய ரஹீம் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று வங்கதேச வீரர் மெஹதி ஹாசன் கூறியுள்ளார். அதை விட 2023 உலகக் கோப்பையில் ஏஞ்சேலோ மேத்தியூஸை காலதாமதத்தால் வித்தியாசமான முறையில் அவுட்டாக்கிய தங்களுடைய அணியைச் சேர்ந்த ஒருவர் இப்படி வினோதமாக அவுட்டாக்கியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அதை அவர் வேண்டுமென்று செய்யவில்லை. போற போக்கில் அப்படி நடந்தது. யாருமே இப்படி தெரிந்து அவுட்டாக விரும்ப மாட்டார்கள். உலகக் கோப்பையில் நாங்கள் இலங்கை பேட்ஸ்மேனுக்கு எதிராக எங்களுக்கு சாதகமாக காலதாமதத்தால் அவுட் கேட்டு வெற்றியும் கண்டோம். ஆனால் இன்று அதே போன்ற நிலைமை முஷி பாய்க்கு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் போற போக்கில் நடந்ததாகும்”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ அணியில் இருக்க வேண்டிய அவரை.. ஏன் கழற்றி விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

“பந்து ஸ்டம்ப் மீது மோதுவதற்காக செல்லும் போது நீங்கள் சில நேரங்களில் வேகமான முடிவை எடுப்பீர்கள். இருப்பினும் கண்டிப்பாக அவர் அதை வேண்டுமென்று செய்யவில்லை” என கூறினார். இந்த நிலைமையில் மேத்தியூஸை மனசாட்சியின்றி அவுட்டாக்கிய உங்களுக்கு இது தேவை தான் என்று இலங்கை ரசிகர்கள் வங்கதேச அணியை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement