இந்திய அணியின் முன்னணி வீரரான இவர் ஒருத்தர் இரண்டு பேருக்கு சமம் – மெக்ராத் புகழ்ச்சி

Mcgrath

2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த முறை டெஸ்ட் தொடர் மட்டுமல்லாது மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் நடைபெறப் போகின்றன. இதற்காக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று விட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 27 ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது.

INDvsAUS

கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற விளையாடியபோது ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்த சேதப்படுத்திய விவகாரம் காரணமாக அந்த அணியில் இடம்பெறவில்லை. இந்த முறை மீண்டும் அவர்கள் இடம் பெற்றிருப்பதால் தற்போதைய அணி வலிமை வாய்ந்த அணியாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விராட் கோலி ஆட இருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மனைவியின் பிரசவம் காரணமாக மீதமிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ஆடாமல் இந்தியாவிற்கு வருகிறார் விராட் கோலி. விராட் கோலி இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல விஷயமாக இருந்தாலும் அதனைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் எங்களது இயல்பான ஆட்டத்தை ஆடுவோம் என்று தெரிவித்து இருக்கின்றனர்.

Kohli-3

ஆனால் விராட் கோலி இல்லை என்றால் அது அணியில் இரண்டு வீரர்கள் இல்லாததற்கு சமம் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத். அவர் கூறுகையில்…

- Advertisement -

Kohli

விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக தான் இருக்கப்போகிறது. கோலி 2 வீரர்களுக்கு சமமானவர். அவரை ஒரு கேப்டனாக ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணி மோசமாக மிஸ் செய்யப்போகிறது. அது தொடரின் முடிவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் கிளன் மெக்ராத்.