இந்திய பவுலரான இவரது பவுலிங்கிற்கு நான் அடிமை. அவ்ளோ சூப்பரான பவுலர் அவர் – மெக்ராத் புகழாரம்

Mcgrath
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இரு அணியும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

pucovski 1

- Advertisement -

முதல் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். இதன் பிறகு புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர். கடந்த நான்கு இன்னிஸ்சில் சொதப்பிய ஸ்மித் தற்போது விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி வருகிறார்.

இதன்மூலம் ஆஸதிரேலிய அணி முதல் நாள் நேரவில் 2 விக்கெட் இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில், செயதியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் க்ளென் மெக்ராத் இந்த இந்திய வீரர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறை இருக்கிறது. இதுகுறித்து பேசிய க்ளென் மெக்ராத் கூறியதாவது :

Gill

இந்திய அதிரடி பேட்ஸ்மன்களான அஜின்கியா ரகானே, ரவிந்திர ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோரிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வோண்டும். அதேபோல் பும்ராவின் பந்துவீச்சுக்கு நான் அடிமை. அவரது பந்துவீச்சு வியப்பாக இருக்கும். நான் அவருடன் பேசிய போது அவர் தனது மனநிலையுடன் செயல்படக்கூடியவர் என்பதை அறிந்துக்கொண்டேன்.

bumrah

இதனால் ஆஸதிரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்து வேண்டும்” என்று கூறியுள்ளார் க்ளென் மெக்ராத். இந்நிலையில் தற்போது முதல் இன்னிங்க்ஸை முடித்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார். அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement