பேட்டிங்கில் கிங் சச்சின்னா .. பவுலிங்கில் இவர்தான் கிங் .. இவரை அடிச்சிக்க ஆளில்லை – மெக்ராத் புகழாரம்

Mcgrath

இங்கிலாந்து நாட்டில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் மூன்றாவது போட்டியில் விளையாடியது. இந்த போட்டியும் மழை காரணமாக டிரா ஆனது மட்டுமின்றி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

anderson 1

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்டுகள் உடனும், இரண்டாவது இடத்தில் வார்னே 708 விக்கெட்டுகள் உடனும், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் உடன் உள்ளனர். இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தானின் அசார் அலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 156 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்று தனது 600 ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 2003ஆம் ஆண்டு தனது கேரியரை ஆரம்பித்த ஆண்டர்சன் சுமார் 17 ஆண்டுகளாக விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் அதிகமாக ஏற்படும். இருப்பினும் காயத்தினால் பல வலிகளை கடந்து இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

anderson 2

இந்நிலையில் ஆண்டர்சனின் இந்த சாதனையை பாராட்டி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பேட்டிங் துறையில் சச்சின் சாதனையை முறியடிப்பது எவ்வளவு கடினமோ அதேபோல்தான் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சனின் சாதனையை முறியடிப்பதும் மிகவும் கடினம் என்று மெக்ராத் புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

Anderson

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 600 விக்கெட்டுகள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டர்சன் போல எனக்கு திறமை கிடையாது. அவரால் பந்தை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஸ்விங் செய்ய முடியும் பந்தை சரியாக கட்டுப்படுத்தி இயற்கையான முறையில் பந்துவீச கூடியவர். அவருக்கு ஈடாக யாரையும் குறிப்பிட முடியாது என்று மெக்ராத் கூறினார்.