எனது காலத்தில் சிறப்பான 5 பவுலர்கள் என்றால் அது இவங்கதான் – மெக்ராத் தேர்வு செய்த அந்த 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Mcgrath
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் கிளன் மெக்ராத். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளிலும், 250 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி தலா 563 மற்றும் 381 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் தனது காலத்தில் விளையாடிய மிகச் சிறந்த ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்ந்த இவர் தன்னுடன் சக காலத்தில் விளையாடிய சிறந்த 5 ஒருநாள் பந்துவீச்சாளர்களை தேர்வுசெய்துள்ளார் அந்த பட்டியலை தற்போது பார்ப்போம்.

akram

- Advertisement -

வாசிம் அக்ரம் :

இவர் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர். இவர் ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் தற்போது பல அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவரான இவர் வேகத்திலும் ஸ்விங் செய்து அசத்தக்கூடியவர்.

Lee

பிரட் லீ :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர். ஒருநாள் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் இவரது பெயர் கண்டிப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தனது காலத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா போன்ற தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை பலமுறை வீழ்த்தி இருக்கிறார்.

Muralitharan

முத்தையா முரளிதரன் :

- Advertisement -

கிரிக்கெட்டின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் என்று பாராட்டப் பட்டவர். கிளன் மெக்ராத் தேர்வுசெய்த அணியில் இவருக்கும் இடம் இருக்கிறது.

Pollock 1

ஷான் பொல்லாக் :

- Advertisement -

இவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர். இவரையும் கிளன் மெக்ராத் தேர்வு செய்திருக்கிறார். இவர் 303 ஒருநாள் போட்டியில் விளையாடி 393 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Vass

சமிந்தா வாஸ் :

இவர் இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர். தனது காலத்தில் பல ஜாம்பவான்களை வீழ்த்தியவர். ஒருநாள் போட்டிகளில் இவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் இடம்பிடித்த இரண்டாவது இலங்கை வீரர் இவர். இந்த பட்டியலில் ஒரு இந்திய பவுலர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement