தற்போதைய கிரிக்கெட்டில் இவரே மிகச்சிறந்த பாஸ்ட் பவுலர். ஆனால் அது பும்ரா இல்லை – மெக்ராத் தேர்வு

Mcgrath
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது கடந்த வாரம் துவங்கி தொடங்கி நடந்து வருகிறது.

Glenn-McGrath

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் தனது கருத்தினை சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பல ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சிய மெக்ராத் கிரிக்கெட் உலகில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரை தனது வேகத்தால் திக்குமுக்காட வைத்துள்ளார். அந்த அளவிற்கு சிறப்பாக பந்து வீசும் திறமை படைத்த மெக்ராத் அப்போதைய பந்துவீச்சாளர்களுக்கு இடையே தனது ஆதிக்கத்தை பெருமளவு நிலைநிறுத்தி நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார்.

mcgrath

ஆஸ்திரேலிய அணிக்காக 124 டெஸ்ட் போட்டியிலும், 250 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய மெக்ராத் மொத்தமாக 949 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முரளிதரன், வார்னே மற்றும் கும்ப்ளே ஆகியோருக்குப் பிறகு நான்காவது இடத்தில் மெக்ராத் இருப்பது குறிப்பிடத்தக்கது.

PatCummins

இந்நிலையில் தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய சிறந்த பார்த்து பலர் யார் என்ற கேள்விக்கு தனது பதிலை அளித்துள்ளார். அதில் தற்போதைய கிரிக்கெட்டில் முழுமையான பாஸ்ட் பவுலர் யார் என்றால் என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தான் என்று அவர் பதிலளித்துள்ளார். ஏனெனில் அவரது பௌலிங் ஸ்டைல் மற்றும் அவர் பந்து வீசும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மெக்ராத் கூறியுள்ளது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement