உங்க வயசு தான் அவருக்கும் ஆகுது. அவரை பாத்து எப்படி பேட்டிங் பண்ணனு கத்துக்கோங்க – சுப்மன் கில்லை கடிந்த மெக்கல்லம்

Mccullum

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம், அந்த அணிக்காக துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு காட்டமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடிக்கொண்டு வரும் சுப்மன் கில், பொறுப்பற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

gill 1

மேலும் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை எடுக்கத் தடுமாறும் சுப்மன் கில், பேட்ஸ்மேன்கள் மிகவும் விரும்பும் புல்லர் லென்த் பந்துகளில் கூட அவுட்டாகி வெளியேறி வருகிறார். அவருடைய இந்த ஆட்டத்தைக் கண்டுவரும் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அவரின் மேல் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே பிரண்டன் மெக்கல்லம், சுப்மன் கில்லைப் பற்றி பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் சுப்மன் கில்லைக் குறிப்பிட்ட அவர்,

சுப்மன் கில் மிகவும் திறமை வாய்ந்த ஒரு இளம் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இத்தொடரில் அவருடைய பேட்டிங் திறமை, நாங்கள் எதிர்பார்த்தப்படி அமையவில்லை. அணியில் வாய்ப்பு வேண்டும், சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று நினைப்பதெல்லாம் சரிதான். ஆனால் அதேபோன்று உங்கள் திறனை களத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

gill

டி0 கிரிக்கெட்டில் அதிரடியான துவக்கம் கிடைத்தால் தான் அது அணிக்கு நல்ல அடித்தளத்தை கொடுக்கும். ஆனால் கில் மிகவும் நிதானமாக ஆடுகிறார். பவர்ப்ளே ஓவர்களில் எப்படி அதிரடியாக ஆட வேண்டும் என்பதை அவர், டெல்லி அணிக்காக விளையாடி வரும் ப்ரித்வி ஷாவைப் பார்த்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

- Advertisement -

shaw-2

ப்ரித்வி ஷாவும், சுப்மன் கில்லும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற, அன்டர் 19 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடிவர்கள். அந்தத் தொடரில் இருவரும் அற்புதமாக விளையாடியதால், முதலில் ஐபிஎல் தொடர்களிலும் பிறகு இந்திய அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ரித்வி ஷா டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடி வரும் சூழ்நிலையில் சுப்மன் கில் இப்படி தொடர்ந்து சொதப்பி கொண்டு வருவதால், இந்திய டெஸ்ட் அணியிலும் ஓப்பனிங் வாய்ப்பு ப்ரித்வி ஷாவுக்கே மறுபடியும் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.