அவர் சொன்னது 100 % உண்மைதான். கங்குலி சொன்னபடி என் வாழ்க்கை மாறிடுச்சு – பூரித்து போன கொல்கத்தா வீரர்

Mccullum
- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த பிரண்டன் மெக்கலம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றாலும் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார். தற்போது அவர் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் பிரண்டன் மெக்கல்லம். அந்த அணிக்காக ஆடியபோது முதல் போட்டியிலேயே ருத்ர தாண்டவம் ஆடி 158 ரன்கள் குவித்தார். ஒருகாலத்தில் டி20 போட்டிகளில் 100 ரன்கள் எடுப்பதே கடினம் என்று இருந்தது அந்த காலகட்டத்திலேயே 158 ரன்கள் குவித்து அபார சாதனை படைத்திருந்தார் பிரண்டன் மெக்கல்லம்.

- Advertisement -

காலப் போக்கில் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய பிரெண்டன் மெக்கல்லம் தற்போது மீண்டும் பத்து வருடங்கள் கழித்து தனது வாழ்க்கையை திருப்பியிருக்கிறார். கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த வருடம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் ரசிகர்களுடன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

Mccullum 1

குறிப்பாக 158 ரன்கள் விளாசிய போது அணி நிர்வாகமும் சௌரவ் கங்குலி மற்றும் அணி உரிமையாளர் ஷாரூக்கான் ஆகியோர் அவரிடம் என்ன கூறினார்கள் என்பது பற்றி பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில் …. அந்த காலகட்டத்தில் நான் மிகவும் இளம் வயது வீரனாக இருந்தேன். நான் மட்டும் தான் எனது அணியில் இளம் வீரர் மற்ற அனைவரும் ஏற்கனவே சர்வதேச அளவில் சாதித்த சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருந்தார்கள்.

- Advertisement -

அதனை தாண்டி எங்களது அணியின் உரிமையாளர், இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகர். இப்படி இருக்கையில் நான் ஏதாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அந்த கணத்தில்தான் அதிரடியாக விளையாடி 158 ரன்கள் அடித்தேன்.

Ganguly

அப்போது சௌரவ் கங்குலி என் அருகில் வந்து சகோதரா… உனது வாழ்க்கையை அப்படியே மாறி விட்டது. இனி உனது வாழ்க்கை ஜொலிக்கப் போகிறது என்று கூறினார். இதனை நான் தற்போது 100% ஏற்றுக் கொள்கிறேன். எனது வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார் பிரண்டன் மெக்கல்லம்.

Advertisement