சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலகட்டத்தில் இரட்டை சதம் அடிப்பது என்பது மிக அரிதான விடயமாக பார்க்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சையத் அன்வர் அடித்திருந்த ரன்களே அதிகபட்ச தனிநபர் ரன்களாக இருந்த வேளையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் குவாலியர் போட்டியில் 200 ரன்களை முதல்முறையாக அடித்து உலக ரசிகர்களை அசர வைத்தார்.
அதன்பிறகு பல்வேறு பல வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தாலும் சச்சினின் அந்த இரட்டை சதம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதேபோன்று இந்திய அணியைச் சேர்ந்த மற்றொரு துவக்க வீரரான ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதத்தை விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களை எந்த வீரரால் அடிக்க முடியும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரெண்டன் மெக்கல்லம் பதிலளிக்கையில் : நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களை அடிக்கும் தகுதி உடையவராக இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மாவை அவர் தேர்வு செய்துள்ளார்.
ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான ரோகித் தற்போது வரை 39 டெஸ்ட் போட்டிகள், 227 ஒருநாள் போட்டிகள் மற்றும் 111 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு நாள் கிரிக்கெட்டில் 49% சராசரியுடன் 88 சதவீதம் ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி வரும் ரோகித் சர்மா 3 இரட்டை சதமடித்து அதுமட்டுமின்றி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ரன்களாக 264 ரன்களை விளாசியுள்ளார்.
மெக்கல்லம் கூறியதுபோல நிச்சயம் ஒருநாள் போட்டிகளில் ஒருவரால் 300 ரன் அடிக்க முடியும் என்றால் அது ரோகித் சர்மா தான் என்றும் அவரது ரசிகர்களும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.