சுனில் நரேன் எப்போது கொல்கத்தா அணிக்காக விளையாடுவார் – கோச் மெக்கல்லம் அளித்த பதில்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி கொண்டனர். முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி, கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்து தவித்து வந்தது. அதே போல அடுத்தடுத்து இளம் வீரர்களான பட்டிதர் மற்றும் படிக்கல் தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற, பெங்களூரு அணியை ஒரு கட்டத்தில் ரன்களை குவிக்க தவித்து வந்தது.

maxwell

ஆனால் பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் மட்டும் ஏபி டிவிலியர்ஸ் ஜோடி மிக அதிரடியாக விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 200 ரன்களுக்கு மேல் எடுக்க உதவி புரிந்தனர். மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களையும் அதேபோல் டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்களை குவித்தனர். குறிப்பாக டிவில்லியர்ஸ் கடைசி 3 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடியது. அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்களை கூட அடிக்க முடியாமல் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நேற்றைய போட்டியில் ரஸ்ஸலை தவிர வேறு எவரும் 30 ரன்களுக்கு மேல் குவிக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக அமைந்தது.

shakib

குறிப்பாக கேப்டன் மோர்கன் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அதேபோல் அதிரடியாக ஆடக்கூடிய ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் வெறும் 5 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டும் அடுத்து ஏமாற்றினார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் வீரராக நம்பி விளையாட வைக்கப்பட்ட ஷகிப் அல் ஹசன் நேற்றைய போட்டியில் மிகபெரிய அளவில் ஏமாற்றினார். பவுலிங்கில் 2 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து ஏமாற்றிய ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கில் வெறும் 25 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஷகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு ஆடுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்திடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இனி அடுத்த போட்டியில் ஷகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு பிரிவிலும் சொதப்பிய ஷாகிப் அல் ஹசனின் பதிலாக மேட்ச் வின்னர் சுனில் நரேன் எப்போது விளையாடுவார் என்பது குறித்து நேற்றைய போட்டியின் முடிவில் அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

kuldeep

இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் மூன்று போட்டிகளிலும் சுனில் நரேன் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை என்பதால் விளையாட வைக்கப்படவில்லை என்றும் நிச்சயம் அடுத்த போட்டியில் சுனில் நரேன் விளையாடுவார் என்று மெக்கல்லம் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.