இந்திய அணியின் வீரரான இவரால் மட்டுமே ஒருநாள் போட்டியில் 300 அடிக்கமுடியும் – மெக்கல்லம் பேட்டி

Mccullum

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் அடிப்பது என்பது ஒரு காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலை முறியடித்து காண்பித்தது இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தான். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் குவாலியரில் நடந்த போட்டியில் 200 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வீரராக 200 ரன்களை சச்சின் அடித்து சாதனை படைத்தார்.

Sachin

அதன்பின்னர் சேவாக், கெயில், கப்தில் என்று சில வீரர்கள் 200 ரன்களை அடித்தாலும் இந்திய அணியின் தற்போதைய துவக்க வீரரான ரோகித் சர்மா 3 முறை இரட்டை சதம் அடித்து அசுர சாதனையை படைத்தார். அதிலும் குறிப்பாக இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்களை அதிகபட்ச ரன்களாக குவித்து இருக்கிறார். ரோஹித்தின் இந்த சாதனை தகர்ப்பது என்பது சற்று முடியாத விடயம் என்றே கூறலாம்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மெக்கல்லம் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300 ரன்கள் அடிக்கும் வீரர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது : தற்போது உள்ள கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களை பல வீரர்கள் அடித்துள்ளனர். அதற்கு காரணம் டி20 போட்டிகளில் வருகையால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட துவங்கிவிட்டனர். இதன் காரணமாகவே சில இரட்டைசதங்கள் ஒருநாள் போட்டிகளில் அளிக்கப்பட்டது.

rohith

இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களை குவிக்கும் வீரர் என்றால் அது நிச்சயம் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மாவால் மட்டுமே முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சதங்களை பெரியசதங்களாக மாற்றும் வழக்கம் உடையவர் மேலும் அவருடைய அதிரடி சதத்தை கடந்து விட்டால் வேறு வகையில் இருக்கும் எனவே தற்போது இருக்கும் வீரர்களில் அவரை மட்டுமே நான் 300 அடிக்கும் வீரர் என்று கூறுவேன் என்று மெக்கல்லம் பேட்டி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -