தோனிக்கு எதிராக இந்த தவறை மட்டும் செய்யவே மாட்டேன் – மும்பை இந்தியன்ஸ் வீரர் புலம்பல்

Mcclenaghan
- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் மெக்ளனகன் சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தற்போது கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இந்த தொடரின் பாதியில் கொரோனா வைரஸ் காரணமாக அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளுக்கிணங்க நாடு திரும்பினார்.

Mcclenaghan-1

- Advertisement -

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் விளையாட இருந்த அவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நியூஸிலாந்து திரும்பியவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் மூலமாக பதிலளித்து வருகிறார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் அவர் தற்போது இந்திய ரசிகர்களின் கேள்விக்கு தனது பதிலை அளித்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க கேள்விகளாக ரசிகர் ஒருவர் தோனியை பற்றி சில வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு அவர் அளித்த சூப்பரான பதில் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தோனி குறித்து அவர் அளித்த பதிலில் தோனிக்கு எதிராக நான் பந்துவீசாமல் இருந்தால் அதுவே எனக்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த பதிலின் மூலம் தோனிக்கு எதிராக அவர் பந்துவீச பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் தோனி அவரது பந்துவீச்சினை சிதறடித்து விடுவார் என்று கருதியே அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.

Mcclenaghan

இந்த ஐ.பி.எல் தொடர் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று இருந்தால் சென்னை மற்றும் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி பேட்டிங் செய்யும்போது மும்பை அணியின் பந்துவீச்சாளரான அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும்.

Advertisement