- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜோ ரூட்டை ஏமாற்றி நோ-பாலில் அவுட்டாக்கினாரா ஆகாஷ் தீப்? இங்கிலாந்தின் விமர்சனத்துக்கு எம்சிசி பதில்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் சுப்மன் கில் 269, 161 ரன்களை அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பந்து வீச்சு துறையில் பும்ராவுக்கு பதிலாக வாய்ப்பைப் பெற்ற ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முன்னதாக அந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங்கில் முதுகெலும்பான ஜோ ரூட்டை அற்புதமான பந்தால் ஆகாஷ் தீப் க்ளீன் போல்ட்டாக்கினார். அதுவே இத்தொடரின் சிறந்த பந்து என்று சச்சின் டெண்டுல்கர் போன்ற பலரும் பாராட்டினார்கள்.

- Advertisement -

நோ-பால் போட்டாரா ஆகாஷ்:

ஆனால் அந்தப் பந்தை வீசும் போது ஆகாஷ் தீப் தனது வலது காலை பிட்ச்சின் வெளியே வெள்ளைக்கோட்டை தாண்டி ஊன்றியதாக இங்கிலாந்தின் பிபிசி வர்ணனையாளர் அலிசன் மிட்சேல் விமர்சித்தார். எனவே அது நோ-பால் என்றும், நடுவர்கள் அதைக் கவனிக்கவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் அது நோ-பால் கிடையாது என்று கிரிக்கெட்டின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு அறிவித்துள்ளது.

அதாவது பந்தை வீசுவதற்கு முன் பவுலரின் கால் முதலாவதாக எங்கே தரையிறங்குகிறது என்பதே முக்கியம் என்று எம்சிசி கூறியுள்ளது. அதன் படி ஆகாஷ் தீப் முதலாவதாக தம்முடைய முன்னங்காலை வெள்ளைக் கோட்டுக்குள் வைத்தார். அதன் பின்பே அவருடைய பின்னங்கால் கொஞ்சமாக வெள்ளைக்கோட்டுக்கு வெளியே ஊன்றியது. எனவே அது நோ-பால் கிடையாது என்று எம்சிசி கூறியுள்ளது.

- Advertisement -

எம்சிசி விளக்கம்:

இது சம்மந்தமாக 21.5.1 விதிமுறையை மேற்கோள் காட்டி எம்சிசி வெளியிட்டுள்ள அறிக்கையில். “எம்சிசி எப்போதும் பின் கால் தரையிறங்கும் தருணத்தை தரையுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாக வரையறுத்துள்ளது. பாதத்தின் எந்த பகுதியும் தரையை தொட்ட பின்பே கால் தரையிறங்குகிறது. அது வெள்ளைக்கோட்டிற்கு வெளியே இருக்கும் போது நோ-பாலாக கருதப்பட வேண்டும்”

இதையும் படிங்க: ஒரு கேப்டனாக இதை பண்ணா தானா மரியாதை கிடைக்கும்.. அதை சுப்மன் கில் சரியா பண்றாரு – மைக்கல் கிளார்க் பாராட்டு

“இங்கே ஆகாஷ் தீப் கால் முதலில் தரையைத் தொடுவது தெளிவாக தெரிகிறது. அவருடைய காலின் சில பகுதிகள் கோட்டுக்கு வெளியே இருக்கலாம். ஆனால் அது இந்த விதிமுறைக்கு தொடர்புடையதல்ல. அவர் தரையிறங்கிய புள்ளி வெள்ளைக் கோட்டுக்குள் இருந்தது. எனவே இது சட்டபூர்வமான பந்தாக சரியாகவே கருதப்பட்டது” என்று கூறியுள்ளது.

- Advertisement -