வங்கதேச அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டியில் அறிமுகமாக இருக்கும் இளம் இந்திய வீரர் – ஜாக்பாட் தான்

Mayank-Yadav
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தற்போது முன்னணி வீரர்கள் அனைவருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகமாக இருக்கும் இளம்வீரர் :

இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்த 22 வயதான மாயங்க் யாதவ் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் லக்னோ அணிக்காக களம் இறங்கிய அவர் முதல் 2 போட்டியிலும் தொடர்ச்சியாக ஆட்டநாயகன் விருது வென்று அசத்தியிருந்தார். அதுமட்டும் இன்றி நான்கு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஓவருக்கு ஏழு ரன்களுக்கு குறைவாகவும் மிக சிக்கனமாகவும் பந்துவீசி வருகிறார்.

அதோடு மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்து வீசும் அவரை கொண்டு பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது. அதோடு லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறார் என்பதனால் அவருக்கு கூடுதல் ஆதரவு கம்பீரிடம் இருந்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நிச்சயம் அவரை பிளேயிங் லெவனில் கம்பீர் விளையாட வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே நிச்சயம் வங்கதேச அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டியில் மாயங்க் யாதவ் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வங்கதேச அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோமீட்டரில் பந்து வீசினாலும் அவர் அவரது ஓவரில் ரன்கள் கசிந்ததால் இந்திய அணியில் இருந்து மெல்ல மெல்ல கழட்டிவிடப்பட்டார். இந்நிலையில் தற்போது அதிகளவு ரன் கொடுக்காமல் அதிவேகத்துடன் பந்துவீசி வரும் மாயங்க் யாதவை அடுத்த அதிவேகப்புயலாக மாற்றும் திட்டம் இந்திய அணியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement