வங்கதேச அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்ககிறது.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :

இந்த டி20 தொடருக்கான முதல் போட்டி அக்டோபர் 6-ஆம் தேதி நாளை குவாலியர் மைதானத்தில் நடைபெற உள்ள வேளையில் இந்த முதல் போட்டிக்கான டி20 பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் அடுத்த அடுத்த டெஸ்ட் தொடர்களுக்காக முன்னணி வீரர்கள் அனைவருக்குமே இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் நாளைய இந்த முதல் டி20 போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.

அதன்படி நாளைய இந்த முதல் டி20 போட்டியில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவார்கள். மூன்றாவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவும், நான்காவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும் விளையாடுவார்கள். அதேபோன்று ஐந்தாவது இடத்தில் ஷிவம் துபேவும், 6 ஆவது இடத்தில் ரிங்கு சிங்கும் விளையாடுவார்கள்.

- Advertisement -

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. எஞ்சியுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மாயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன்படி நாளைய இந்த முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐசிசி மகளிர் 2024 டி20 உ.கோ: துவங்கும் முன்பே நாக் அவுட்டான இந்தியா? செமி ஃபைனல் செய்ய வேண்டியது

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) சூரியகுமார் யாதவ், 4) ஹார்டிக் பாண்டியா, 5) ஷிவம் துபே, 6) ரிங்கு சிங், 7) வாஷிங்டன் சுந்தர், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஹர்ஷித் ராணா, 11) மாயங்க் யாதவ்.

Advertisement