வங்கதேசம் 127க்கு ஆல் அவுட்.. மயங் யாதவ் தனித்துவ சாதனை.. இந்தியாவுக்காக வருண் 3 வருட கம்பேக்

Mayank Yadav
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் ஆறாம் தேதி துவங்கியது. குஜராத் மாநிலம் குவாலியர் நகரில் இரவு 7 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு முதல் ஓவரிலேயே லிட்டன் தான் 4 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார்.

அத்தோடு நிற்காத அர்ஷ்தீப் தனது அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரர் பர்வேஸ் ஹொசைனை 8 ரன்களில் போல்ட்டாக்கினார். அதைத் தொடர்ந்து அறிமுக வீரர் மயங் யாதவ் 6வது ஓவரை வீசினார். ஆனால் அந்த ஓவரில் அதிரடியான வேகத்தில் வீசிய அவர் 1 ரன் கூட வழங்காமல் மெய்டன் ஓவராக பதிவு செய்தார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது கேரியரின் முதல் ஓவரையே மெய்டனாக பதிவு செய்த இந்திய கிரிக்கெட் வீரர் தனித்துவமான சாதனையை மயங் யாதவ் சமன் செய்தார். இதற்கு முன் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அஜித் அகர்கரும் 2022ஆம் ஆண்டு அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்துக்கு எதிராகவும் தங்களுடைய கேரியரை துவங்கிய போது முதல் ஓவரையே மெய்டனாக போட்டு இந்த சாதனையை படைத்துள்ளனர்.

அடுத்த ஓவரில் டௌஹித் ஹ்ரிடாய் 12 ரன்களில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரில் அடுத்து வந்த அனுபவ வீரர் முகமதுல்லா ஒரு ரன்னில் மயங் யாதவ் வேகத்தில் அவுட்டானார். போதாகுறைக்கு அதற்கடுத்ததாக வந்த ஜாகிர் அலி 8 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சூழலில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

சிறப்பான கம்பேக்:

அதனால் 57-5 என தடுமாறிய வங்கதேசத்தை எதிர்புறம் காப்பாற்ற முயற்சித்த கேப்டன் நஜ்முல் 27 ரன்களில் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். இறுதியில் நம்பிக்கை நட்சத்திரம் மெஹதி ஹசன் போராடி 35*, ரிஷத் ஹொசைன் 11, தஸ்கின் அஹ்மத் 12 ரன்கள் அனைத்தும் வங்கதேசத்தை 19.5 ஓவரில் இந்தியா 127 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

இதையும் படிங்க: டிராவிஸ் ஹெட்டை அந்த 2 பவுலர்களை வெச்சே இந்தியா முடிச்சுருவாங்க.. ஆஸியை எச்சரித்த இயன் சேப்பல்

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக 3 வருடங்கள் கழித்து இப்போடியில் இந்தியாவுக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி 4 ஓவரில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய சிறந்த பவுலிங்கை பதிவு செய்து அசத்தல் கம்பேக் கொடுத்துள்ளார்.

Advertisement