இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் மாயங்க் யாதவ் பங்கேற்பது சந்தேகம் – காரணம் இதோ

Mayank-Yadav
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவ் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதோடு நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த வேளையில் அதில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார்.

மாயங்க் யாதவ் விளையாடுவது சந்தேகம் :

அவரது வேகம் மற்றும் துல்லியம் ஆகியவை பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்த வேளையில் விரைவில் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

அந்த வகையிலேயே கடந்த அக்டோபர் மாதம் வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரின் போது அவருக்கு இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த ஒரு தொடர்போடு காயம் காரணமாக வெளியேறிய மாயங்க் யாதவ் அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் அவர் காயம் காரணமாக தவறவிட உள்ளார். முதுகில் ஏற்பட்டுள்ள தசைப் பிடிப்பு காரணமாக மாயங்க் யாதவ் அவதிப்பட்டு வருவதால் இந்த தொடரில் இருந்தும் அவர் வெளியேற உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கோலியின் பிரச்சனைக்கு கம்பீர் என்ன செய்வாரு.. அப்படின்னா டிராவிட்டையும் குறை சொல்லனும்.. ஆகாஷ் சோப்ரா

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பொதுவாகவே முதுகுப் பகுதியில் தசை பிடிப்பு என்பது பணிச்சுமை காரணமாக ஏற்படும். இளம் வீரரான இவர் தற்போது அதனை கருத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பலரும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement