கோலியின் பிரச்சனைக்கு கம்பீர் என்ன செய்வாரு.. அப்படின்னா டிராவிட்டையும் குறை சொல்லனும்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தொடர்ச்சியாக அவுட்டாகி வருகிறார். அதன் காரணமாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

முன்னதாக மாதக்கணக்கில் விராட் கோலி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுக்கும் அளவுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் என்ன செய்கிறார்கள்? என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். இந்நிலையில் வருட கணக்கில் விராட் கோலி அந்த பலவீனத்தை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதனால் கௌதம் கம்பீர் அதற்கு பொறுப்பாக முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கம்பீர் என்ன செய்வாரு:

அப்படி பார்த்தால் கடந்த பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஏன் விராட் கோலியின் அந்த பலவீனத்தை சரி செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “கவாஸ்கர் பாய், சஞ்சய் மஞ்ரேக்கர் பாய் ஆகியோர் விராட் கோலியின் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை நாள்பட்டது என்று தெரிவித்தார்கள்”

“அதை கௌதம் கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் ஆகிய பயிற்சியாளர்கள் குழுவினர் தீர்த்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நாள்பட்டது என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்கும் போது அது இன்று மட்டும் இருக்கக்கூடியதாக இருக்காது. நீண்ட நாட்களாக இருந்திருக்க வேண்டும். அது தற்போது மீண்டும் வந்துள்ளது. எனவே அதற்காக நீங்கள் 6 மாதங்களாக மட்டும் செயல்படும் பயிற்சியாளர்கள் குழுவை எப்படி குறை சொல்ல முடியும்?”

- Advertisement -

கோலியின் பலவீனம்:

“கௌதம் கம்பீர் பிரச்சனையை தீர்க்காததால் தான் விராட் கோலி அவ்வாறு அவுட்டாகிறார் என்று உங்களால் சொல்ல முடியாது. அந்த நாள்பட்ட பிரச்சனை சமீபத்தில் ஏற்பட்டிருக்க முடியாது. அப்படி பார்த்தால் நீங்கள் கடைசியாக இருந்த பயிற்சியாளர்கள் குழுவை பற்றியும் பேச வேண்டும். ஆனால் அவர்களை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அந்த தமிழக வீரர் வந்துட்டா ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கேரியர் முடியலாம்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு

அவர் கூறுவது போல 2014 இங்கிலாந்து தொடரில் விராட் கோலிக்கு முதல் முறையாக அந்த பிரச்சனை இருந்தது. பின்னர் அதில் முன்னேறிய விராட் கோலி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் மீண்டும் 2021 தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து அவர் அதே பாணியில் அவுட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement