இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. அதற்கு தயாராகும் நோக்கத்தில் விரைவில் நடைபெறும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா விடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே அவர் தொடர்ச்சியாக பேட்டிங்கில் அசத்துவதில்லை.
அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன்பாக புதிய சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரை உருவாக்க பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விரும்புகிறார். எனவே ஜடேஜாவை கழற்றி விட்டு வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களை அவர் தேர்ந்தெடுப்பார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் வரும் சக்ரவர்த்தி 6 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஜடேஜா கேரியர்:
மேலும் கடந்த ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் மேற்பார்வையில் கொல்கத்தா வெல்வதற்கும் அவர் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக புதிய பயிற்சியாளராக கம்பீர் வந்ததும் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய வருண் சக்கரவர்த்தி அவருடைய நம்பிக்கையை முழுமையாக பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டால் ஜடேஜாவின் ஒருநாள் கேரியர் முடிவுக்கு வரலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். விஜய் ஹசாரே கோப்பையிலும் அவர் நன்றாக செயல்பட்டுள்ளார்”
தமிழக வீரருக்கு வாய்ப்பு:
“ராஜஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்ச்சியாக அசத்தி வருகிறார். ஏற்கனவே டி20 அணியில் மீண்டும் வந்த அவர் இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டிகளிலும் விக்கெட்டுகளை எடுத்தார். அதன் காரணமாக சாம்பியன்ஸ் ட்ராபிக்கு கோப்பையில் அவர் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக வதந்திகள் காணப்படுகின்றன”
இதையும் படிங்க: சச்சின், கோலி ஹீரோ கலாச்சாரமே 8 – 0 வீழ்ச்சிக்கு காரணம்.. ஆஸி மாதிரி அகர்கர் இதை செய்யனும்.. மஞ்ரேக்கர் அதிரடி
“ஒருவேளை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரவீந்திர ஜடேஜா வெளியே செல்ல வேண்டும். அதைத்தான் நான் கேட்டு வருகிறேன். அவர் நடந்தால் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனிலும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதே போல ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேலும் இந்திய அணியில் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறினார்.